'எங்ககிட்ட பிளான் இருக்கு'... 'அதான் இந்த 3 பேரு இருகாங்க இல்ல' ... 'தல'யின் பெரிய நம்பிக்கை!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | May 10, 2019 07:55 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே இன்று 2வது தகுதிச்சுற்று போட்டி விசாகப்பட்டினத்தில் தொடங்கியுள்ளது.டாஸ் வென்ற சென்னை அணி பௌலிங்கை தேர்ந்தெடுத்துள்ளது.

CSK SPinners have taken 55 wickets in this IPL so far

இன்றைய போட்டியில் வெற்றி பெரும் அணியே இறுதி போட்டிக்கு செல்லும் என்பதால்,ரசிகர்களுக்கு இது பெரும் விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக சென்னை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.இந்நிலையில் சென்னை அணியின் பேட்டிங் வரிசை சற்று மந்தமாக இருப்பது பெரும் கவலையாக கருதப்படுகிறது.தோனி மட்டுமே சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.மற்ற வீரர்கள் சில போட்டிகளில் நன்றாக விளையாடுவதும்,சில போட்டிகளில் சொதப்புவதுமாக இருக்கிறார்கள்.இதனால் தோனி பந்துவீச்சையே பெரும்பாலும் நம்பி உள்ளார்.

அதிலும் குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் தோனிக்கு தளபதி போன்று செயல்பட்டு வருகிறார்கள்.இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங், ஜடேஜா ஆகிய மூன்று பேரைத் தான் பெரும்பாலும் நம்பி இருக்கிறது என கூறலாம்.இம்ரான் தஹிர் இதுவரை 15 போட்டிகளில் விளையாடி 23 விக்கெட் சாய்த்துள்ளார். அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் ரபாடாவுக்கு அடுத்து இவர் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இந்நிலையில் ஆல்ரவுண்டராக கலக்கி வரும் ஜடேஜா 13 விக்கெட்களை சாய்த்து தனது பணியினை சிறப்பாக செய்துள்ளார்.ஜடேஜா ரன்களை வாரி வழங்காமல் கட்டுக்கோப்பாக பந்து வீசுவது,அவரது மிகப்பெரிய பிளஸ்ஸாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் தான் இந்த தொடரில் அதிக விக்கெட்களை சாய்த்துள்ளார்கள்.எனவே தோனியின் மிகப்பெரிய நம்பிக்கையாக இந்த மூவரும் திகழ்கிறார்கள்.