VIDEO: அட போங்கயா..! அம்பயருடன் ‘சண்டை’ போட்டு பொல்லார்டு செஞ்ச செயல்.. ரொம்ப கோவக்காரரா இருப்பாரு போலயே..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் அம்பயரிடம் கோபப்பட்டு பொல்லார்டு செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் செயிண்ட் லூசியா கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த டிரின்பாகோ நைட் ரைடர்ஸ், 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் பொல்லார்டு 41 ரன்களும், சீஃபெர்ட் 37 ரன்களும் எடுத்தனர். செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியை பொறுத்தவரை கெஸ்ரிக் வில்லியம்ஸ் 4 விக்கெட்டுகளும், வஹாப் ரியாஸ், அல்சாரி ஜோசப் மற்றும் ரோஸ்டன் சேஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் மட்டும் எடுத்தது. இதில் அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆண்ட்ரே பிளெட்சர் 81 ரன்கள் அடித்தார். ஆனால் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், 27 ரன்கள் வித்தியாசத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் செய்தது. அப்போது போட்டியின் 19-வது ஓவரை வீசிய வஹாப் ரியாஸ் 5-வது பந்தை வொய்டாக வீசினார். ஆனால் அம்பயர் இதற்கு வொய்ட் கொடுக்கவில்லை. அப்போது நான்-ஸ்டைக்கர் எண்டில் நின்று கொண்டிருந்த பொல்லார்டு அம்பயரிடம் முறையிட்டார். ஆனாலும் அம்பயர் வொய்ட் கொடுக்க மறுத்துவிட்டார்.
இதனால் கோபமான பொல்லார்டு, அம்பயர் நின்ற இடத்தில் இருந்து கொஞ்சம் தூரம் தள்ளிப்போய் நின்றுவிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.
Polly : Are you blind?
Umpire : Yes
Pollard walks away 😂😂😂 #TKRvSLK #CPL2021 @KieronPollard55 pic.twitter.com/NGjSdMqmYu
— Thakur (@hassam_sajjad) August 31, 2021
பொல்லார்டு அடிக்கடி அம்பயரிடம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது வழக்கம். ஐபிஎல் தொடரின் போட்டி ஒன்றில் இதேபோல் அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொல்லார்டு, தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக வாயை டேப்பால் ஒட்டிக்கொண்டு விளையாடினார்.
இது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பொல்லார்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
