"தத்தளித்து கொண்டிருந்த அணி!".. கடைசி 4 ஓவரில் ‘பொளந்து கட்டிய பொல்லார்டு!’.. அவருடன் சேர்ந்து தெறிக்க விட்ட வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடியாக ஆடி 176 ரன்கள் குவித்திருந்தது.
டாஸ் வென்ற மும்பை மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்ய, தொடக்கத்தில் பேட்டிங் வரிசை மோசமாக செயல்பட்டது. கேப்டன் ரோஹித் சர்மா 9 ரன்களில் வெளியேறினார். டி காக், தன் சிறந்த பார்மை மீண்டும் வெளிப்படுத்தி 43 பந்துகளில் 53 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். முன்னதாக சாதாரண வேகத்தில் தான் ரன் குவித்த மும்பை அணி, கடைசி 4 ஓவர்களில், பொல்லார்டின் அதிரடி ஆட்டத்தால் போட்டியை புரட்டி போட்டது. அவருடன் எதிர்பாராத ஆல் - ரவுண்டர் ஒருவர் இணைந்ததுதான் மேட்ச் இன்னும் சிறப்பாக மாறியதற்கு காரணம்.
பின்னர் மும்பை அணி 16.3 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்த மும்பை அணியில் அப்போது பொல்லார்டு களத்தில் இருந்தார். அவரது விக்கெட் பறி போனால் மும்பை அணி பாதாளத்தை அடையும் என்ற நிலை இருந்தது. அப்போது அவர் அதிரடி ஆட்டம் ஆடினார். அவருடன் இணைந்த அந்த கரம் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் நாதன் கோல்டர் நைல் தான். அவர் 12 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்தார். பொல்லார்டு 12 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார். இதனால் மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.
மொத்தமாக பொல்லார்டு - நாதன் கோல்டர் நைல் ஜோடி 21 பந்துகளில் 57 ரன்கள் குவித்து தத்தளித்த மும்பை அணி, அதில் இருந்து மீண்டு பெரிய ஸ்கோரை அடித்தது.