'சீக்கிரத்திலே அணிக்கு வந்துருவாரு’... ‘உற்சாகமாக காத்திட்டு இருக்கோம்’... ‘நம்பிக்கை தந்த கேப்டன்’... ‘மகிழ்ச்சியில் ரசிகர்கள்’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகாயம் காரணமாக அவதிப்பட்டு வரும் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா, உடல்நலம் தேறி வருவதாக, அந்த அணியின் பொறுப்பு கேப்டன் கெய்ரன் பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.
மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் போட்டியில், இடது கால் தொடையில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் காரணமாக ரோகித் சர்மா அடுத்த சில போட்டிகளில் பங்கேற்கவில்லை. மேலும் நேற்று டெல்லி அணிக்கெதிராக நடந்தப் போட்டியிலும் விளயாடாதநிலையில், எதிர்வரும் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் ரசிகர்கள் கவலை அடைந்தனர்.
இந்தநிலையில், நேற்றையப் போட்டி முடிந்தப் பிறகு ரோகித் சர்மா குறித்த ஒரு முக்கிய தகவலை மும்பை அணியின் தற்காலிக கேப்டன் பொல்லார்ட் பகிர்ந்து கொண்டார். அதில் ‘ரோகித் சர்மா காயத்தில் இருந்து கிட்டத்தட்ட மீண்டு விட்டார் என்றும், விரைவில் அவர் மும்பை அணியில் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது’ என தெரிவித்தார். ரோகித் சர்மா வருகைக்காக, அணி வீரர்கள் உற்சாகத்துடன் காத்திருப்பதாகவும் பொல்லார்ட் கூறியதால், மும்பை அணி ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் அணி தனது கடைசி லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணயை எதிர்கொள்கிறது. அப்போது, ரோஹித் ஷர்மா களமிறங்குவார் என்றும் தகவல்கள் வெளியாகின்றன. எனினும், மும்பை ஏற்கனவே முதல் இரண்டு இடங்களில் தன்னை நிலைநிறுத்திவிட்டதால், பிளே ஆஃப் சுற்றில்தான் ரோகித் சர்மா களமிறங்குவார் எனக் கூறுப்படுகிறது.