"மொத்தமா அடிச்சு துவம்சம் பண்ணிட்டாரு.. அத பாத்ததும் 'எனக்கு' எப்படி இருந்துச்சு தெரியுமா??.. 'பொல்லார்ட்' ஆட்டத்தால் பிரம்மித்து போய் 'ஹர்திக்' சொன்ன அந்த 'விஷயம்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே இன்று நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி, கொல்கத்தா வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள காரணத்தினால், தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த சனிக்கிழமை மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில், மொயின் அலி, டுபிளெஸ்ஸிஸ், ராயுடு ஆகியோர் அதிரடியாக ஆடி ரன் குவிக்க, 20 ஓவர்கள் முடிவில் 218 ரன்கள் எடுத்திருந்தது.
தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி, ஆரம்பத்தில் அதிரடியாக ஆடிய நிலையில், மிடில் ஓவர்களில் சற்று நிதானம் காட்டியது. அது மட்டுமில்லாமல், தொடக்க விக்கெட்டுகள் சிலவற்றையும், அந்த சமயத்தில் மும்பை அணி இழந்தது. இதன் காரணமாக, இலக்கை எட்டுவதில், மும்பை அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.
ஆனால், மிடில் ஆர்டரில் களமிறங்கிய பொல்லார்ட் (Pollard), ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். பந்துகள் அனைத்தும் சிக்ஸ் மற்றும் பவுண்டரி என பறக்க, கடைசி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இறுதி பந்தில் இலக்கை எட்டி, பட்டையைக் கிளப்பினார் பொல்லார்ட். கடைசி வரை களத்தில் நின்ற அவர், 34 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் எடுத்தார்.
இதனைத் தொடர்ந்து, மும்பை ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த நிலையில், மும்பை வீரர் ஒருவரே பொல்லார்ட்டின் ஆட்டத்தால், வாயடைத்து போயுள்ளார். மும்பை அணியிலுள்ள ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா (Hardik Pandya), பொல்லார்ட் ஆட்டம் பற்றி ஆச்சரியத்துடன் பேசியுள்ளார்.'இது மாதிரி, ஒரு போட்டியில் நாம் வெற்றி பெறும் போது, நிச்சயம் அந்த இரவு முழுவதும் அதிக மகிழ்ச்சியில் இருப்போம். அப்படி ஒரு ஆட்டத்தை பொல்லார்ட் செய்யும் போது, நீங்கள் கண்டிப்பாக வாயடைத்து போவீர்கள்.
இதில், சிறந்த விஷயம் என்னவென்றால், அவர் கடந்த சில ஆண்டுகளிலும், தனது அணிக்காக, இதனை மீண்டும் மீண்டும் செய்துள்ளார். இப்படி ஒருவர் திரும்ப திரும்ப, தனது அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதை பார்க்கும் போது, அது எனக்கு அதிக உத்வேகத்தை தருகிறது. பொல்லார்டை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்' என ஹர்திக் பாண்டியா மகிழ்ச்சியுடன் கூறினார்.