"'மேட்ச்'க்கு நடுவுல, அப்படி எத விரட்டிட்டு இருக்காரு இவரு??.. ஆனாலும், இந்த பொல்லார்ட் 'சேட்டை' புடிச்ச ஆளு தான்யா.." 'வைரலாகும்' வீடியோ!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Apr 29, 2021 10:38 PM

கடந்த இரண்டு ஐபிஎல் சீசனில், தொடர்ச்சியாக கோப்பையை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த சீசனில் சற்று தடுமாற்றத்துடன் ஆடி வந்தது.

pollard hilarious reaction after ball hits helmet gone viral

ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக இன்று வெற்றி பெற்ற மும்பை அணி, நல்ல ஒரு கம்பேக்கை கொடுத்துள்ளது. இதற்கு முன்பாக, 5 போட்டிகளில் ஆடியிருந்த மும்பை, 2 போட்டிகளில் வெற்றி கண்டிருந்தது. பேட்டிங்கில் கடுமையாக சொதப்பியிருந்த மும்பை அணி, சிறப்பான பந்து வீச்சின் உதவியால் தான் அந்த இரு வெற்றிகளையும் பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து, இன்றைய போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 171 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணியில், தொடக்க வீரர் டி காக் 70 ரன்களுடன் இறுதி வரை களத்தில் நின்று, அணியை வெற்றி பெறச் செய்தார். அதே போல, க்ருணால் பாண்டியா, பொல்லார்ட் ஆகியோர், சற்று கை கொடுக்க, மும்பை அணி எளிதில் வெற்றி பெற்றது.

இரண்டு தோல்விகளுக்கு பின் வெற்றி பெற்றுள்ள மும்பை அணி, பேட்டிங்கிலும், சற்று ஃபார்முக்கு வந்துள்ளதால், அந்த அணி ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். இதனிடையே, இந்த போட்டியின் இறுதிக் கட்டத்தில், பேட்டிங் செய்து கொண்டிருந்த பொல்லார்ட் (Pollard) செய்த செயல் ஒன்று, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

மும்பை பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, 18 ஆவது ஓவரை, கிறிஸ் மோரிஸ் (Chris Morris) வீச, முதல் இரண்டு பந்துகளை முறையே சிக்ஸர் மற்றும் பவுண்டரிக்கு விளாசினார் பொல்லார்ட். அதன் பிறகு, மோரிஸ் வீசிய பந்து, நேராக உயர்ந்து வர, பொல்லார்ட் கீழே குனிந்து கொண்டார். அப்போது பந்து அவரது ஹெல்மெட்டில் பட்டு, வேகமாக ஃபைன் லெக் திசையை நோக்கிச் சென்றது.

 

கிட்டத்தட்ட பந்து பவுண்டரி என்பது உறுதியான நிலையில், ரன் ஓடாமல் நின்ற பொல்லார்ட், பந்தை நோக்கி 'வேகமாக போ' என்பது போல, கையைக் காட்டி பவுண்டரி லைனை நோக்கி விரட்டுவது போல செய்து காட்டினார். எது போன்ற போட்டிகள் ஆனாலும், எப்போதும் இதே போன்று வேடிக்கையாக அல்லது நக்கலாக,  பொல்லார்ட் ஏதேனும் செய்வது வழக்கம்.

 

அதே போல, இன்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும், பந்தை விரட்டுவது போல பொல்லார்ட் சைகை காட்டியது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது நெட்டிசன்கள் மத்தியல், அதிகம் வைரலாகி வருகிறது.

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Pollard hilarious reaction after ball hits helmet gone viral | Sports News.