'மும்பை' பவுலர்களை லெஃப்ட், ரைட் வாங்கிய 'ராயுடு'.. "அதுல அவரு அடிச்ச 'சிக்ஸ்' ஒண்ணு எங்க போய் பட்டுச்சு தெரியுமா??.." மிரள வைத்த 'வீடியோ'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரிலேயே, மிக முக்கியமான போட்டியாக கருதப்படுவது, மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டியாகும்.

இந்த இரண்டு அணிகளின் ரசிகர்கள் மட்டுமின்றி, அனைத்து அணிகளின் ரசிகர்களும், மிக ஆவலுடன் எதிர்நோக்கும் போட்டியாகும். இந்நிலையில், 14 ஆவது ஐபிஎல் சீசனின், மும்பை மற்றும் சென்னை அணிகள் இன்று முதல் முறையாக மோதின. இந்த போட்டியில், டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா, பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.
இதன்படி ஆடிய சிஎஸ்கே அணியில் மொயின் அலி 58 ரன்களும், டுபிளஸ்ஸி 50 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். அதே போல, கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ராயுடு, 27 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் எடுத்து அசத்தினார். சென்னை அணி 218 ரன்கள் எடுத்த நிலையில், தொடர்ந்து கடின இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி, பொல்லார்ட் (Pollard) அதிரடியுடன் கடைசி பந்தில், இலக்கை எட்டிச் சாதனை புரிந்தது.
இதனிடையே, பும்ரா, போல்ட் என அனைவரின் ஓவரையும் விட்டு வைக்காத ராயுடு, இந்த போட்டியில் அடித்த சிக்ஸ் தொடர்பான வீடியோ ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. இந்த சீசனில், தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம், சில சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளை அடித்து அவுட்டானாலும், இன்று தான் அதிக ரன்கள் குவித்து அசத்தினார் ராயுடு.
இதனிடையே, பும்ரா வீசிய 17 ஆவது ஓவரில், ராயுடு அடித்த சிக்ஸர் ஒன்று, மும்பை அணியின் டக் அவுட்டில் இருந்த பிரிட்ஜ்ஜின் கதவை பதம் பார்த்தது. இதன் காரணமாக, பிரிட்ஜ் கதவு, சில்லு சில்லாக உடைந்தது. இது தொடர்பான வீடியோக்கள் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது.
This was the moment #MIvsCSK #IPL2021 #mi #csk #rayudu pic.twitter.com/vef1ngmURv
— Gaurav Gambhir (@GauravGambhir16) May 1, 2021

மற்ற செய்திகள்
