
VIDEO: ‘ஹலோ ப்ரதர் கொஞ்சம் அங்க பாருங்க’!.. தவானை ‘வார்னிங்’ பண்ணிய பொல்லார்டு.. இதை யாராவது நோட் பண்ணீங்களா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் போது ஷிகர் தவானை மும்பை வீரர் பொல்லார்டு எச்சரிக்கை செய்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரின் 13-வது போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், இளம்வீரர் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியால், 20 ஓவர்களில் 137 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ராவின் ஓவரில் மும்பை அணியின் முக்கிய விக்கெட்டுகள் முழுவதும் சரிந்தன. அவரது ஓவரில் கேப்டன் ரோஹித் ஷர்மா (44 ரன்கள்), ஆல்ரவுண்டர்களான ஹர்திக் பாண்ட்யா (0), பொல்லார்டு (2 ரன்) மற்றும் இளம்வீரர் இஷான் கிஷான் (26 ரன்கள்) ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகினர்.
டெல்லி அணி வெற்றி பெற குறைவான இலக்கே நிர்ணயிக்கப்பட்டதால், ஆரம்பம் முதலே ரன்கள் கட்டுப்படுத்து வேலையில் மும்பை அணி இறங்கியது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர் ப்ரீத்வி ஷா 7 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த ஷிகர் தவான் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இந்த கூட்டணி பிரிக்க மும்பை அணி பல்வேறு சோதனைகளை முயற்சி செய்தது. ஆனாலும் அவர்களை அவுட்டாக்க முடியவில்லை. இதனை அடுத்து பொல்லார்டு ஓவரில் ஸ்டீவன் ஸ்மித்தும் (33 ரன்கள்), ராகுல் சாகர் ஓவரில் ஷிகர் தவானும் (45 ரன்கள்) அவுட்டாகினர். அடுத்த வந்த கேப்டன் ரிஷப் பந்த் 7 ரன்னில் அவுட்டானாலும், லலித் யாதவ் (22 ரன்கள்)-ஹெட்மெயர் (14 ரன்கள்) ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் 19.1 ஓவர்களில் 138 ரன்கள் எடுத்து டெல்லி அணி வெற்றி பெற்றது.
#MIvsDC pic.twitter.com/7k1MVPBEFU
— MumbaiCha Fan (@mumbaichafan) April 20, 2021
இந்த நிலையில் இப்போட்டியில் தவானை, பொல்லார்டு மான்கட் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆட்டத்தின் 10-வது ஓவரை மும்பை அணியின் ஆல்ரவுண்டர் பொல்லார்டு வீசினார். அப்போது அவர் பவுலிங் செய்ய ஓடி வந்தபோது, நான் ஸ்ட்ரைக்கில் நின்ற தவான்,க்ரீஸை தாண்டி சென்றிருந்தார். உடனே பந்துவீசுவதை நிறுத்திய பொல்லார்டு, க்ரீஸ் லைனை கை காண்பித்து தவானை மான்கட் எச்சரிக்கை செய்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு பஞ்சாப் அணியின் சார்பாக விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜாஸ் பட்லரை மான்கட் முறையில் அவுட் செய்தார். அது அப்போது பெரிய சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
