‘கேப்டன் ஆன மும்பை இந்தியன்ஸ் ஸ்டார் ப்ளேயர்’.. இன்ஸ்டாகிராமில் வாழ்த்து கூறி பரபரப்பை கிளப்பிய சிஎஸ்கே வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Sep 10, 2019 03:36 PM

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டனாக பொல்லார்ட் நியமிக்கப்பட்டதற்கு பிராவோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Hopefully I can finally get back in WI colors, says Bravo

நடந்து முடிந்த உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணி லீக் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறியது. மேலும் தற்போது நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று தொடரிலும் தோல்வியை தழுவியது. இதன்விளைவாக புதிய கேப்டனை நியமிக்க வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

இதில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு ஜேசன் ஹோல்டர் கேப்டனாகவும், டி20 போட்டிக்கு ப்ராத்வொய்ட் கேப்டனாகவும் இருந்தனர். தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு கேப்டனாக பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பிராவோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பொல்லார்ட்டுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், ‘வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டனாக எனது நண்பன் பொல்லார்ட் நியமிக்கப்பட்டதற்கு எனது வாழ்த்துக்கள். நீங்கள் அதற்கு தகுதியானவர்தான். நீங்கள் சிறப்பான கேப்டனாக செயல்படுவீர்கள். கடைசியாக நான் வெஸ்ட் இண்டீஸ் அணியில் மீண்டும் விளையாடுவேன் என நம்புகிறேன்’ என பதிவிட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 40 டெஸ்ட், 164 ஒருநாள் மற்றும் 66 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள பிராவோ கடந்த 2018 -ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த நிலையில் பொல்லார்ட் கேப்டனான பிறகு பிராவோ மீண்டும் அணியில் விளையாட விருப்பம் தெரிவித்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. இவர் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிள்ளார். அதேபோல் பொல்லார்ட் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #CSK #MUMBAI-INDIANS #BRAVO #POLLARD #CAPTAIN #WESTINDIES #ODI #T20 #CRICKET #CHAMPION