ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் பஞ்சாப் அணியின் உரிமையாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை! அரசு அதிரடி தீர்ப்பு!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Arunachalam | Apr 30, 2019 04:42 PM
கிங்ஸ் 11 பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியாவிற்கு ஜப்பான் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

வாடியா குழுமத்தின் தலைவரான நெஸ் வாடியா இந்தியாவில் பிரிட்டானியா, பாம்பே டையிங், கோ ஏர் விமான நிறுவனம் உள்ளிட்ட பல வணிக நிறுவனங்களை நடத்தி வருகிறார். மேலும் இவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான கிங்ஸ் 11 பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவராகவும் இருக்கிறார்.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் ஜப்பான் சென்றிருந்த நெஸ் வாடியா தனது பாக்கெட்டில் 25 கிராம் கஞ்சா வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து, அவரிடம் நடத்திய விசாரணையில் தனது சொந்த பயன்பாட்டிற்காக தான் கஞ்சா வைத்திருந்ததாக நெஸ் வாடியா கூறியுள்ளார்.
இதனையடுத்து, ஜப்பானில் கஞ்சாவிற்கு தடை உள்ளதால் நெஸ் வாடியாவுக்கு 2 ஆண்டுகள் “சஸ்பண்டட் ஜெயில்” என்று ஜப்பான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில், சஸ்பண்டட் ஜெயில் என்றால் மூன்று ஆண்டுகள் சிறை அல்லது 5,00,000 யென் அபராதம் செலுத்த வேண்டும். ஆனால் இவர் அடுத்த முறை, இதே குற்றத்தை மீண்டும் செய்தால்தான் இந்த தண்டனை அமலுக்கு வரும்.
தற்போது நெஸ் வாடியாவிற்கு வழங்கியுள்ள தீர்ப்பின் படி 2 ஆண்டுகள் சிறை தண்டனை என கூறப்பட்டாலும், அடுத்த 5 ஆண்டுகளில் இவர் ஏதாவது குற்றம் செய்தால் மட்டுமே சிறைக்கு செல்வார் என்று கூறப்படுகிறது.
