‘எனக்கு பக்கபலமா இருந்தீங்க’..‘ஐபிஎல் -க்கு பாய்’.. உருக்கமான பதிவுடன் விடைபெற்ற அதிரடி வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 30, 2019 05:11 PM

ஹைதராபாத் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

IPL 2019: Warner posts emotional message for SRH

ஹைதராபாத் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான வார்னர், இந்த வருட ஐபிஎல் சீசனின் நட்சத்திர ஆட்டக்காரராக இருந்துவந்தார். இதில் 12 போட்டிகளில் விளையாடி 692 ரன்கள் குவித்து முதல் இடத்தில் கடைசி வரை இருந்துவந்தார்.

இதனை அடுத்து வரயிருக்கும் உலகக் கோப்பையில் விளையாட ஆஸ்த்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளார். இதற்கான பயிற்சியில் ஈடுபட நாடு திரும்புகிறார். இந்நிலையில் நேற்றைய பஞ்சாப் அணியிடனான தனது கடைசி போட்டியில் அதிரடியாக விளையாடி 81 ரன்கள் விளாசினார். இந்த தொடரில் 8 அரைசதங்களையும், ஒரு சதத்தையும் அடித்துள்ளார்.

உலகக் கோப்பை பயிற்சியில் ஈடுபட ஏற்கனவே ஜானி பேர்ஸ்டோ நாடு திரும்பிய நிலையில், தற்போது வார்னரும் செல்வது ஹைதராபாத் அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

Tags : #IPL #IPL2019 #WARNER #SRH