‘ஆட்டமிழந்த விரக்தியில் பிரபல வீரர் செய்த காரியம்’.. ‘காயத்தால் அடுத்த போட்டியில் விளையாடுவதில் சிக்கல்’..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Oct 14, 2019 06:58 PM

ஆஸ்திரேலிய அணியின் மிச்செல் மார்ஷ் ஆட்டமிழந்த விரக்தியில் சுவற்றில் மோதியதில் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

Australias Mitchell Marsh Punches Wall Injures Bowling Hand

மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் டாஸ்மானியா அணிகளுக்கு இடையேயான உள்ளூர் கிரிக்கெட் போட்டி பெர்த் நகரில் நடைபெற்றுள்ளது. இதில் மேற்கு ஆஸ்திரேலிய அணிக்காக களமிறங்கிய மிச்செல் மார்ஷ் அரை சதம் அடித்த சில நிமிடங்களிலேயே ஆட்டமிழந்தார்.

இதையடுத்து களத்திலிருந்து ஓய்வறைக்குத் திரும்பிய அவர் ஆட்டமிழந்த விரக்தியில் சுவற்றில் தனது கையைக் கொண்டு பலமாகக் குத்தியுள்ளார். இதில் அவருக்கு வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரால் பந்துவீச முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த மாதம் நடைபெற உள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Tags : #AUSTRALIA #MITCHELLMARSH #WALL #PUNCH #INJURY #HAND #BOWLING