‘பும்ராவையா இப்டி சொன்னாங்க’ யார் அவங்க.? யாருன்னு பேர மட்டும் சொல்லுங்க.? வெகுண்டெழுந்த முன்னாள் கேப்டன்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Sep 02, 2019 05:06 PM

பும்ராவின் பௌலிங் ஆக்‌ஷன் குறித்த கருத்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

Gavaskar slams Bumrah bowling action criticism

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளாரான பும்ரா தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டுக்கான புள்ளிப்பட்டியலில் பும்ரா முதல் இடத்தில் உள்ளார். துல்லியமான மற்றும் நேர்த்தியான பௌலிங்கின் மூலம் எதிரணியை திணறடிப்பதில் பும்ரா திறமையானவர். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தியுள்ளார்.

பும்ராவின் பௌலிங் குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் இயன் பிஷப், ‘பும்ராவின் பௌலிங் ஆக்‌ஷனை சிலர் சந்தேகிக்கின்றனர். அதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவரின் பௌலிங் ஆக்‌ஷன் வித்தியாசமானது. அவரின் பௌலிங் ஆக்‌ஷனை சந்தேகிப்பவர்கள் கண்ணாடி முன் நின்று பார்க்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

உடனே இதற்கு பதிலளித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர், ‘யார் அவர்கள் ? பும்ராவின் பௌலிங் ஆக்‌ஷனை சந்தேகிப்பவர்களின் பெயரை கூறுங்கள்’ எனக் கேட்டார். இதற்கு இயன் பிஷப் பதிலளிக்கவில்லை. தொடர்ந்து பேசிய கவாஸ்கர், ‘அவரது பௌலிங்கை நன்றாக பாருங்கள். சிறிது தூரம் மட்டுமே ஓடி வருகிறார். பின்னர் கைகளை நேராக வைத்து வீசிகிறார். அவரது கை எங்கே மடங்குகிறது ? அவர் மிகச்சரியாக பந்து வீசுகிறார்’ என தெரிவித்துள்ளார்.

Tags : #BUMRAH #GAVASKAR #BOWLING #CRITICS #TEAMINDIA #INDVWI #TEST #CRICKET