‘அந்த ரெண்டு பிளேயர்கள் இல்லாமலேயே ஜெயிச்சுட்டோம்’... ‘ரொம்ப பெருமையா இருக்கு’... ‘போட்டிக்கு பின்பு கேப்டன் கோலி கருத்து’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 2-வது போட்டியில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது.

தொடரை வென்றது குறித்து கேப்டன் விராட் கோலி கூறியதாவது, ‘ஒரு அணியாக ஒற்றுமையாக விளையாடி தொடரை வென்றது மகிழ்ச்சி. உண்மை என்னவென்றால், ஒருநாள், டி20 போட்டிகளில், ரோகித் சர்மா, பும்ரா போன்ற வளர்ந்த திறமையான வீரர்கள் இல்லாமல் தொடரை வென்றுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த அணியை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.
அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் 14 போட்டிகளுக்குள் விளையாடிய அனுபவம் உள்ள இளைஞர்கள். ஒவ்வொருவரும் அவர்களின் திட்டத்தை நன்கு உணர்ந்து களத்தில் செயல்படுத்தினார்கள். இளம் வீரர்கள் தங்களுக்கான வாய்ப்பை பயன்படுத்தி பங்களிப்புச் செய்தார்கள்.
கடந்த 2016-ல் ஹர்திக் பாண்ட்யா அணிக்குள் வந்ததே அவரின் முழுத் திறமையால்தான். உண்மையான திறமைசாலி அவர். இது அவருக்கான நேரம் என்பதை ஹர்திக் உணர்ந்திருக்கிறார். அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் அணிக்கு மிகப்பெரிய சொத்தாக ஹர்திக் பாண்ட்யா மாறி எந்தப் போட்டியையும் வெல்லும் திறமை படைத்தவராக மாறுவார்.
அவரி்ன் திட்டம் சரியாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏபிடி போன்ற ஷாட்டை நான் ஆடியபோது ஆன்ட்ரூ டை கூட எதிர்பார்க்கவில்லை. இன்று இரவு ஏபிடிக்கு என் ஷாட் குறித்து தெரிவிப்பேன்' என்று கோலி தெரிவித்தார்.
இந்நிலையில் ஆட்டநாயகன் விருதுக்கு தகுதியானவர் நடராஜன்தான். அவரின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால்தான் இலக்கில் 10 ரன்கள் குறைந்தது என்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா பெருந்தன்மையுடன் தெரிவித்தார்.
ஆனால், கேப்டன் விராட் கோலி தனது பேச்சில் ஹர்திக் பாண்ட்யாவின் பேட்டிங் குறித்து பெருமிதமாகக் குறிப்பிட்ட நிலையில், நடராஜனின் பந்துவீச்சை பாண்ட்யா அளவுக்கு பெரிதாகக் குறிப்பிடாமல் இருந்தது ஏனோ எனத் தெரியவி்ல்லை என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில் டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு தனது வாழ்த்துக்களை ரோகித் சர்மா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
What a series win for Team India. Loved the way they played nice and composed. Big 👍 to each one of them. @BCCI
— Rohit Sharma (@ImRo45) December 6, 2020

மற்ற செய்திகள்
