ஓ இதான் மேட்டரா...! ஏலியன் மேல வேற சந்தேகப் பட்டோமேடா...' - மர்ம தூண் குறித்து விலகிய மர்மம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்சமீபநாட்களாக அமெரிக்காவைச் சுற்றி உலோகத்தூண் காணப்படுவதும், மீண்டும் மறைவதும் என நடந்த சம்பவங்களில் தற்போது மர்மம் விலக தொடங்கியுள்ளது.
அமெரிக்காவின் உட்டாவில் உள்ள பாலைவன பகுதியில் கடந்த நவம்பர் 18அன்று 10 முதல் 12 அடி உயரம் உடைய உலோக தூண் கண்டறியப்பட்டு நவம்பர் 27 அன்று அப்பகுதியிலிருந்து மறைந்தது. அதையடுத்து ருமேனிய நகரமான பியாட்ரா நீம்டுவில் நவம்பர் 27 அன்று தோன்றி டிசம்பர் 1 மறைந்தது.
மீண்டும் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் டிசம்பர் 2 அன்று மீண்டும் ஒரு தூண் தோன்றியது. மேலும் நியூ மெக்சிகோ, இங்கிலாந்து, நெதர்லாந்து, கொலம்பியா, போலந்து, ஆஸ்திரேலியா என அடுத்தடுத்து தோன்றி அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது அந்த தூண் பற்றிய மர்மங்கள் ஒவ்வொன்றாக விலக துவங்கியுள்ளன. அதாவது, 'தி மோஸ்ட் ஃபேமஸ் ஆர்டிஸ்ட்' என்கிற குழு உட்டா மற்றும் கலிஃபோர்னியாவில் உலோக தூணை நட்டுவைத்தது தாங்கள் தான் எனப் பொறுப்பேற்றுக்கொண்டது.
இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட தூணை வடிமைத்தது தான் தான் என ஒப்புதல் அளித்துள்ளார் டாம் டன்ஃபோர்ட் என்பவர். இப்படி மூன்று தூண்களின் தோற்றம் குறித்த பின்புலம் தெரியவந்துள்ள நிலையில், மீதி தூண்களை வைத்தது யார், அவற்றைத் திரும்ப எடுத்து யார் என்ற விவரங்கள் ஏதும் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.