‘கிரிக்கெட் மட்டுமில்ல ‘தல’ இந்த கேம்லையும் கெத்து காட்டுவாரு’.. ஆர்மி கேம்ப்பில் தோனி ஆடிய புது கேம்..! வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Aug 05, 2019 08:27 AM

ஆர்மி கேம்ப்பில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி வாலி பால் விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH: MS Dhoni plays volleyball with his Territorial Army battalion

இந்திய அணி சுற்றுப்பயணமாக வெஸ்ட் இண்டீஸுக்கு சென்று 3 ஒருநாள், 3 டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதன் முதல் இரண்டு டி20 போட்டிகள் அமெரிக்காவில் நடந்து முடிந்தன. இரு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்த தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி இடம்பெறவில்லை. இந்திய ராணுவத்தில் சேவை செய்ய இரண்டு மாத ஓய்வில் சென்றுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக அணியில் விளையாடி வருகிறார். இந்நிலையில் ஆர்மி கேம்ப்பில் தோனி வாலி பால் விளையாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags : #MSDHONI #LIEUTENANT COLONEL #BATTALION #ARMY #TEAMINDIA #VOLLEYBALL #VIRAL