'இத செஞ்சு முடிக்காம கண்ண மூடமாட்டேன்'.. கடைசி உரை.. கலைஞர் நினைவலைகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Aug 07, 2019 07:25 PM
தமிழகத்தின் முதல்வராக 5 முறை பதவி வகித்த கலைஞர் கருணாநிதி, அண்ணாவிற்கு பின், திமுக-வின் மூத்த தலைவராக இருந்தவர். தமிழ்ப்பேச்சில் வல்லவரான கலைஞர் தன்னுடைய 94வது வயதில் கடைசியாக பேசியது என்ன தெரியுமா?
‘92 வயது ஆகிவிட்டது. ஆனால் நான் ஏற்றுக்கொண்ட ஒரு லட்சியம் இருக்கிறது. திமுக-விற்கு அந்த மாபெரும் வெற்றியை, மாலையை தேடித் தந்துவிட்டு அந்த லட்சியத்தை முடித்துவிட்டுதான், நான் கண்ணை மூடவேண்டும்’ என்று கலைஞர் கடைசியாக அண்ணா அறிவாலயத்தில் நிகழ்ந்த விழா ஒன்றில் பேசினார். அப்போது இன்றைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கலைஞரின் அருகில் அமர்ந்திருந்தார்.
கலைஞரின் இந்த பேச்சுக்கு, உற்சாகத்தில் தொண்டர்கள் ஆர்ப்பரித்து கைத்தட்டினர். இதுவே கடைசியாக கலைஞர் பேசிய உரை. 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி இந்த உரையாற்றிய கலைஞர், அதன் பின்னர் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் 07-ஆம் தேதி கலைஞர் கருணாநிதி மறைந்தார். அவருக்கு சென்னை மெரினாவில் நினைவுச் சதுக்கம் அமைக்கப்பட்டுள்ளது.