‘காலி ப்ளாஸ்டிக் பாட்டிலுக்கு காசு’.. ‘அறிமுகமான புது கேஸ்பேக் திட்டம்’.. அசத்திய மாவட்ட ஆட்சியர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Sep 17, 2019 11:10 AM

நீலகிரி மாவட்டத்தில் ப்ளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில் ‘கேஸ்பேக்’ என்னும் புதிய திட்டத்தை அம்மாவட்ட ஆட்சியர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

Avoid using plastic and get cashback offer in Nilgiris

கடந்த மாதம் முதல் ப்ளாஸ்டிக் குடிநீர் பாட்டிகள் பயன்படுத்த நீலகிரி மாவட்டத்தில் தடைவித்திக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஏடிஎம் மூலம் தண்ணீர் கிடைக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ப்ளாஸ்டிக் பாட்டில்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா ‘கேஸ்பேக்’ என்னும் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார். அந்த வகையில் உதகை நகராட்சியில் 5 இடங்களில் ப்ளாஸ்டிக் மறுசுழற்சி செய்யும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் மறுசுழற்சிக்காக ஒரு ப்ளாஸ்டிக் பாட்டிலை செலுத்தினால் 5 ரூபாய் கேஸ்பேக் மொபைல் நம்பருக்கு வரும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Tags : #NILGIRIS #CASHBACK #PLASTIC #RECYCLING #COLLECTOR