‘சொல்றதை செய்யணும்’.. ‘ஆன்லைன்’ கேம் விளையாடிய இளைஞர் கைது.. வெளியான ‘திடுக்கிடும்’ தகவல்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jun 29, 2020 01:00 PM

ஆன்லைன் கேம் மோகத்தால் இளைஞர் ஒருவர் சிறைக்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Youth playing online dare game and arrested for hack bank account

உத்தர பிரதேச மாநிலம் பிலாரியாகஞ்ச் பகுதியை சேர்ந்த ஆசிரியர் ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து திடீரென 10 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர் உடனே காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனை அடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் வங்கி கணக்கை ஹேக் செய்ய பயன்படுத்தப்பட்ட செல்போன் எண் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே செல்போன் எண்ணுக்கு சொந்தக்காரரான ஆக்ராவை சேர்ந்த சாகர் சிங் (20) என்ற இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளன.

ஊரடங்கால் வீட்டிலேயே இருந்ததால் சர்வதேச ஆன்லைன் டேர் கேம் (Online Dare Game) ஒன்றை சாகர் சிங் விளையாடியுள்ளார். அந்த விளையாட்டில் கட்டளையிடப்படும் அனைத்தையும் விளையாடுபவர் செய்ய வேண்டும். அப்போது அந்த விளையாட்டில் எப்படி ஹேக் செய்யவது என கற்றுகொண்டுத்திருக்கிறார்கள். பின்னர் ஒரு வங்கிக் கணக்கை ஹேக் செய்து பணத்தை எடுக்குமாறு அந்த இளைஞருக்கு கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது.

உடனே அந்த இளைஞரும் வங்கிக் கணக்கை ஹேக் செய்து பணத்தை எடுத்ததாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஒப்புக்கொண்டார். மேலும் அந்த விளையாட்டில் ஹேக்கிங் திறமையை பயன்படுத்தி எப்படி பணம் சம்பாதிக்க முடியும் என கற்றுக் கொடுத்ததாக அந்த இளைஞர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் கேமிங் என்ற பெயரில் மர்ம கும்பல் இளைஞர்களை குறிவைப்பதால், பாதுகாப்பாக இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Youth playing online dare game and arrested for hack bank account | India News.