'ஓஹோ புருசனுக்கு இப்படி தான் டீ கொடுப்பியா'... 'கதறிய தாய்'... 'அலறியடித்து கிச்சனுக்கு ஓடிய குழந்தைகள்'... இப்படி ஒரு கணவன் இருப்பாரா?
முகப்பு > செய்திகள் > இந்தியாமனித உயிர் என்பது விலைமதிப்பற்றது. ஆனால் அந்த உயிரை அற்ப காரணங்களைக் கூறி எடுக்கும் மனிதர்களைப் பார்க்கும் போது, இப்படி கூட இருப்பார்களாக என எண்ணத் தோன்றும். அதுபோன்ற ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூர் மாவட்டம் பார்பர் பகுதியைச் சேர்ந்தவர் பப்லு குமார். 40 வயதான இவருக்கு ரேனு என்ற மனைவி உள்ளார். இவர்களுக்குத் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆன நிலையில், இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தினமும் காலையில் எழுந்தவுடன் பப்லு தேநீர் குடிப்பது வழக்கம். அந்த வகையில் ரேனு, பப்லு குமாருக்குக் காலையில் தேநீர் போட்டுக் கொடுத்துள்ளார். அப்போது அதைக் குடித்த பப்லு, தேநீரில் சர்க்கரை குறைவாக இருப்பதாகக் கூறியுள்ளார்.
அவ்வாறு கூறியதோடு கணவனுக்குத் தேநீர் போடும் போது கூட உனக்குக் கவனம் இல்லையா என கூறி ரேனுவிடம் சண்டையிட்டு உள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த பப்லு குமார் கிச்சனில் இருந்த கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். அப்பாவும், அம்மாவும் ஏதோ பேசிக் கொண்டு இருக்கிறார்கள் என அறையில் படுத்துக் கொண்டிருந்த குழந்தைகள் தாயின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்துள்ளார்கள்.
அப்போது கிச்சனில் ரேனு ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் ரேனுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை செய்த பப்லு குமாரைத் தேடி வருகின்றனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் "தேநீரில் சர்க்கரை இல்லாததால் கணவர், மனைவியைக் கொலை செய்தது தெரியவந்துள்ளதாகக் கூறியுள்ளார்கள். மேலும் கொலை செய்யப் பயன்படுத்திய கத்தியைப் பறிமுதல் செய்துள்ளோம். அவர்களின் மூன்று பிள்ளைகள் இது குறித்து சாட்சி கூறியுள்ளனர். விரைவில் பப்லு குமார் கைது செய்யப்படுவார்" எனத் தெரிவித்தனர்.

மற்ற செய்திகள்
