திருமண ஊர்வலத்தின் போது வந்த ஒரு ‘போன்கால்’.. பாதியில் நிறுத்தப்பட்ட ‘கல்யாணம்’.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருமணம் ஊர்வலத்தின் போது வந்த போன் காலை அடுத்து திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நிச்சயம் நடந்துள்ளது. அதனால் திருமணத்திற்காக கடந்த 15ம் தேதி உத்தரபிரதேசம் மாநிலம் அமேதிக்கு மணமகன் தனது குடும்பத்தினருடன் வந்துள்ளார். அப்போது அவர்களது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் திருமணத்திற்காக மணமகன் அழைப்பு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. அப்போது மணமகன் மற்றும் அவரது தந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அதிகாரிகள் செல்போனில் தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து அங்கு வந்த காவல்துறையினர் திருமண ஊர்வலத்தை உடனடியாக தடுத்து நிறுத்தினர். உடனே கொரோனாவால் பாதிக்கப்பட்ட மணமகன் மற்றும் அவரது தந்தை ஆகிய இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் மணமகன் குடும்பத்தினர் 10 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மணமகன் மற்றும் அவரது தந்தை முழுமையாக குணமடையும் வரை திருமணத்தை நடத்த கூடாது என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மணமகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் திருமணம் பாதியில் நிறுத்தப்பட்ட சம்பவம் இரு வீட்டாரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

மற்ற செய்திகள்
