"சார்... நாங்க இருக்கோம்..." 'இலவசமா' கொரோனா 'பரிசோதனை' பண்றோம்... 'அப்டின்னு சொல்வாங்க...' 'கிளிக் பண்ணிடாதிங்க...'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Jun 29, 2020 12:16 PM

கொரோனாவால் அச்சுறுத்தல் உச்சத்தில் இருக்கு இந்த நேரத்தில்தான் சைபர் மோசடிக் கும்பல்கள் துடிப்புடன் இயங்கிவருகின்றன. எப்போதையும்விட work from home-இல் நாம் அதிகம் இணையத்தைப் பயன்படுத்தப்படும் இந்த சூழலை பயன்படுத்தி போலி இணையதளங்கள், மோசடி அழைப்புகள், எஸ்.எம்.எஸ் எனப் பல வழிகளில் இந்த சைபர் மோசடிகள் நடக்கின்றன.

Cyber scams happening in the name of Corona-Government Warning

தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்குக் கீழ் செயல்படும் சைபர் பாதுகாப்பு அமைப்பான Indian Computer Emergency Response Team (CERT-In) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `இந்தியாவில் பெருமளவில் சைபர் மோசடிகளை மேற்கொள்ள ஒரு கும்பல் திட்டமிட்டிருக்கிறது. அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மோசடி என்பது போலி இ-மெயில்கள் மூலம் நடந்துவருகிறது. கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் உள்ளூர் அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் பெயரில், COVID -19 தடுப்புக்காக உதவி கேட்பது போல இந்த மெயில்கள் அனுப்பப்படலாம்.

இதில் வரும் லிங்க்கை கிளிக் செய்தால் அது உங்களை ஒரு போலி இணையதளத்திற்குக் கொண்டு செல்லும். அதில் மலிஷியஸ் வைரஸ்கள் உங்கள் சாதனங்களில் பதிவிறக்கப்படலாம் அல்லது உங்களது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படலாம்.

``Free COVID-19 tests for all residents of Delhi, Mumbai, Hyderabad, Chennai and Ahmedabad" போன்ற தலைப்புகளுடன் இந்த மெயில்கள் வரும். எக்காரணத்திற்காகவும் அதில் இருக்கும் லிங்க்களை கிளிக் செய்துவிட வேண்டாம், தனிப்பட்ட தகவல்களைக் கொடுத்துவிட வேண்டாம் இதுபோன்ற சைபர் தாக்குதல்கள் ஜூன் மாதம் முதல் நடந்துவருகிறது" என்கிறது அந்த அறிக்கை.

கொரோனா சோதனைகளின் பெயரில்  மோசடி மெயில்கள் வந்தால் உடனடியாக incident@cert-in.org.in என்ற மெயிலுக்கு ரிப்போர்ட் செய்யும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Cyber scams happening in the name of Corona-Government Warning | India News.