'அதுக்கு' 7 மணி நேரம்... 'இதுக்கு' 3 மணி நேரமா?... போராட்டக் களத்தில் குதித்த பெண்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | May 05, 2020 08:25 PM

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் தற்போது மூன்றாம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா வைரஸ் குறைவான மண்டலங்களில் மூன்றாம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடைகள் அனைத்தும் அதிக நேரம் திறந்திருக்க அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

Women starts protest again liquor shops in Vizag

இந்நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் மக்கள் சமூக இடைவெளியை சரிவர கடைபிடிக்காமல் இருந்ததால் மீண்டும் காய்கறி கடைகள் திறந்திருக்கும் நேரத்தை மூன்று மணி நேரமாக குறைத்தது. இதனையடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதுக்கடைகளை காலை 10 மணி முதல் மாலை ஐந்து மணி வரை செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவை எதிர்த்து விசாகப்பட்டினம் பகுதியிலுள்ள பெண்கள் போராட்டம் நடத்தினர். அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் காய்கறி மார்கெட்டுகள் மூன்று மணி நேரமும், மதுக்கடைகள் ஏழு நேரம் செயல்படுவதும் முறையில்லை. இது முற்றிலும் நியாயமானதாக இல்லை' என தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் சென்னை தவிர மற்ற பகுதிகளில் கொரோனா கட்டுபாடுள்ள பகுதிகளில் மதுக்கடைகள் வரும் ஏழாம் தேதி முதல் செயல்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.