"கொரோனா லாக்டவுன் டைம்லதான் இத பத்தி பேசணுமா?".. கருக்கலைப்பு சட்ட திருத்தத்தால் கொதித்த பெண்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்போலந்தில் கருக்கலைப்புக்கு தடைவிதிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

போலந்து நாட்டில் கருக்கலைப்புக்கு கடுமையான விதிமுறைகளை பின்பற்றப் படுவதால், கருச்சிதைவு ஏற்பட்டாலோ அல்லது பாலியல் வல்லுறவின் காரணமாக ஒரு பெண் கருவுற்றாலோ அல்லது பெண்ணின் உயிருக்கு ஆபத்து நேரும் என்றாலோ மட்டுமேதான் அங்கு கருக்கலைப்பு செய்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்த விதிமுறைகளை தளர்த்தக் கோரி போலந்து பெண்கள் போராட்டம் நடத்தி வந்தனர். கொரோனா தொற்று காரணமாக போலந்து முழுமையாக முடங்கி இருந்த சூழலில் இந்த சட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் பலரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
