'பெண் நீதிபதிக்கு வந்த பார்சல்'... 'திறந்து பார்த்தால் முழுவதும் காண்டம்'... பார்சலை அனுப்பிய பெண் சொன்ன பகீர் தகவல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெண் நீதிபதிக்குக் காண்டம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் கூடுதல் நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்று பணியாற்றி வருபவர் புஷ்பா கே திவாலா. சமீபத்தில் இவர் வழங்கிய தீர்ப்புகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் குறிப்பாகக் கடந்த ஜனவரி 19ம் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கு ஒன்றை விசாரித்தார். அதில் தோலோடு தோல் தொடர்பின்றி சிறுமியைச் சில்மிஷம் செய்வது போக்சோ சட்டப்படி குற்றமில்லை எனத் தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பு கடும் சர்ச்சையையும், எதிர்ப்பையும் ஏற்படுத்திய நிலையில், இதுபோன்ற தீர்ப்புகள் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் எனப் பலரும் அச்சம் தெரிவித்தார்கள். இந்நிலையில் 5 வயது சிறுமி பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட மற்றொரு வழக்கை விசாரித்த திவாலா, சிறுமியின் கையை பிடித்திருப்பதோ, பேண்ட் ஜிப் திறந்திருப்பதோ பாலியல் வன்முறை ஆகாது எனக் கூறி குற்றஞ்சாட்டப்பட்டவரை விடுவித்தார்.
இந்த தீர்ப்பும் கடும் கண்டங்களுக்கு உள்ளானது. இதுபோன்ற தீர்ப்புகள் பெண்களின் பாதுகாப்பினை கேள்விக்குறியாக்குவதாகப் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். இதையடுத்து நீதிபதி புஷ்பா கே திவாலாவின் பதவிக்காலத்தைக் குறைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் தேவஸ்ரீ திரிவேதி என்ற பெண், சர்ச்சைக்குரிய தீர்ப்பு அளித்த அந்த பெண் நீதிபதிக்கு 100-க்கும் மேற்பட்ட காண்டம்களை பார்சலில் அனுப்பி வைத்து தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். பெண் நீதிபதிக்குக் காண்டம் அனுப்பப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.