'பயன்படுத்தி தூக்கிப்போட்ட ஆணுறைகள்'... 'இத வச்சு என்னய்யா பண்றீங்க'?... 'குடோன் ஓனர் சொன்ன பதில்'... ஆடிப்போன அதிகாரிகள்!
முகப்பு > செய்திகள் > உலகம்சில மனிதர்கள் தாங்கள் விரைவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையில், அடுத்தவர் நலனில் கொஞ்சமும் அக்கறை இல்லாமல் செய்யும் ஆபத்தான செயல்கள் மற்றவரை எந்த அளவிற்குப் பாதிக்கும் என்பது குறித்து கொஞ்சமும் சிந்தித்துப் பார்ப்பது இல்லை. அந்த வகையில் பயன்படுத்தப்பட்ட காண்டத்தை வைத்து பணம் சம்பாதிக்க நினைத்த கும்பல் ஒன்று சிக்கியுள்ளது.

வியட்நாமின் Binh Duong என்ற பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு குடோனில் சந்தேகிக்கும் வகையில் சில செயல்கள் நடப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த குடோனில் சோதனை செய்ய போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்குச் சென்றார்கள். அங்கு ஏதாவது உணவு கலப்படம் ஏதாவது நடக்கலாம் என்ற எண்ணத்தில் அதிகாரிகள் அந்த குடோனை திறந்து பார்த்தார்கள். அப்போது அவர்களின் மொத்த எண்ணத்தைத் தவிடு பொடியாக்கும் விதமாக ஆணுறை குவியலை அங்குப் பார்த்தார்கள்.
அதைப் பார்த்து அதிகாரிகள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். ஆணுறையைப் பார்த்து என்ன அதிர்ச்சி வேண்டி இருக்கிறது என நினைக்கலாம். ஆனால் அங்கு இருந்த ஆணுறைகள் அனைத்தும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுத் தூக்கி வீசப்பட்ட ஆணுறைகள் ஆகும். மறுசுழற்சி செய்யப்பட்ட சுமார் 360 கிலோ எடையுடைய 3,24,000 ஆணுறைகளை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். இதையடுத்து அந்த குடோனின் உரிமையாளரைப் பிடித்து அதிகாரிகள் விசாரித்த நிலையில், அவர் கூறிய பதில் அவர்களை மேலும் அதிர்ச்சியில் தள்ளியது.
இந்த ஆணுறைகளைச் சமீபத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொடுத்ததாகவும், அவற்றைச் சுத்தம் செய்து, காய வைத்து பின்னர் அதன் வடிவத்திற்கு ஏற்ப மாற்றி விற்பனை செய்ய வைத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து அந்த நபரைக் கைது செய்த போலீசார், அவரிடம் மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே Binh Duong மாகாண சுகாதாரத்துறை இயக்குநர் கூறுகையில், ''பயன்படுத்தப்பட ஆணுறைகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்தினால் பல ஆபத்தான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதுபோன்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் மற்றவர்களின் உடல்நலத்தோடு விளையாடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஆணுறைகள் எங்கெல்லாம் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. அதுகுறித்த விவரங்களை காவல்துறையினர் சேகரித்து வருகிறார்கள்'' என அவர் தெரிவித்துள்ளார். உணவில் கலப்படம் செய்து விற்கும் நபர்களை பார்த்திருப்போம், ஆனால் ஆபத்தான வியாதிகள் பரவலாம் எனத் தெரிந்தும் இதுபோன்ற மோசமான செயல்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும் என அந்த மாகாண மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

மற்ற செய்திகள்
