போர் போடும்போது பூமிக்குள்ள இருந்த பானை.. வெளியே எடுத்த கொஞ்ச நேரத்துல மொத்த கிராமமும் பரபரப்பாகிடுச்சு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திர பிரதேச மாநிலத்தில் போர் போடும்போது தங்க காசுகள் கண்டுபிடிக்கப்பட்டது அப்பகுதி முழுவதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள எடுவடலா பாலம் கிராமத்தை சேர்ந்தவர் மனுகொண்டா சத்திய நாராயணா. விவசாயியான சத்திய நாராயணா சில தினங்களுக்கு முன்னர், தனது வயலில் போர் போட்டிருக்கிறார். அப்போது, பூமிக்குள் மண்பானை ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதற்குள் தங்க நாணயங்கள் இருந்ததை கண்ட சத்திய நாராயணா திகைத்துப்போயிருக்கிறார்.
கொஞ்ச நேரத்தில் இந்த தகவல் அந்த கிராமம் முழுவதும் பரவவே, மக்கள் கூட்டம் கூடிவிட்டது. இதனிடையே இதுகுறித்து சத்திய நாராயணா தாசில்தாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார். அதன் அடிப்படையில் அங்கு வந்த தாசில்தார் மற்றும் அரசு அதிகாரிகள், மண்பாண்டம் மற்றும் அதற்குள் இருந்த 18 தங்க காசுகளை கைப்பற்றினர்.
முதலில் 17 தங்க காசுகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பின்னர் மேலும் ஒரு தங்க காசு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த தங்க நாணயங்களின் எடை 61 கிராம் இருந்ததாகவும் தாசில்தார் பி. நாகமணி தெரிவித்திருக்கிறார். மேலும், கைப்பற்றப்பட்ட தங்க நாணயங்கள் மாவட்ட ஆட்சி தலைவரிடத்தில் ஒப்படைக்கப்படும் எனவும் இதுகுறித்து, தொல்லியல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பேசிய கொய்யாலகுடம் தாசில்தார் பி.நாகமணி," சத்திய நாராயணா என்பவர் தனது பண்ணையில் போர் போடும்போது தங்க காசுகள் கிடைத்ததாக எங்களிடம் தெரிவித்தார். நாங்கள் பண்ணைக்குச் சென்று தங்கக் காசுகளைப் பற்றி விசாரித்து நாணயங்களை சேகரித்தோம். அவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு கருவூலத்தில் டெபாசிட் செய்யப்படும். சம்பவம் குறித்து தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளோம்" என்றார்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் விவசாய பண்ணையில் போர் போடும்போது தங்க காசுகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி முழுவதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
