"யார் இறந்து போனாலும் ஒரே ஒரு மாலை தான்".. ஊரே சேர்ந்து எடுத்த அதிரடி முடிவு!!.. தமிழ்நாடு முழுக்க வைரல்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பொதுவாக ஒரு நபர் இறக்கும் போது அவர் மீது நிறைய மாலைகள், மலர் வளையங்கள் வைக்கப்படுவது என்பது இயல்பான ஒன்று தான்.
சிறிய சைஸில் உள்ள மாலைகள் தொடங்கி, பெரிய அளவில் ஆளுயர மாலைகள் கூட இறந்த நபர்களுக்கு வைக்கப்பட்டு தான் வருகிறது.
அப்படி ஒரு சூழலில், ஒரு கிராமத்தை சேர்ந்த மக்கள், இறந்த நபர்களுக்கு மாலை அணிவிப்பது தொடர்பாக ஓட்டு மொத்தமாக எடுத்த முடிவு தொடர்பான செய்தி, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
வேதாரண்யம் வட்டம், ஆயக்காரன்புலம் 2 ஆம் சேத்தி ஊராட்சியில் சாந்தான்வெளி, அகரம் இரு சிறு குடியிருப்பு பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் எடுத்துள்ள முடிவு தான் தற்போது தமிழ்நாடு அளவில் பலர் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக, சமீபத்தில் அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் கூடி ஒரு முடிவை எடுத்துள்ளனர். பொதுவாக, இல்லங்களில் மரணம் ஏற்படும் போது கிராமத்தினர் சார்பில் ஒரு மாலை மட்டும் அணிவித்து இறுதி சடங்குகள் செய்வது என்றும், இறப்பு செய்தி அறிவிக்கும் போதே மாலை தவிர்க்கவும் என அறிவிக்கப்படும் என்றும் அவர்கள் ஒன்றாக சேர்ந்து முடிவு செய்துள்ளனர்.
மேலும் இந்த முடிவை எடுத்ததற்கான காரணம் தான் தற்போது அதிகம் கவனம் பெற்றும் வருகிறது. பொதுவாக, இறந்த ஒரு நபருக்கு நிறைய மாலைகள் போடும் போது அவரது உடலின் மீது மாலைகள் அப்படியே குவிந்து கிடக்கும். அது மட்டுமில்லாமல், வழி நெடுக அதனை பிய்த்து தூவி செல்லும் போது வாகன ஓட்டிகள் வழுக்கி விபத்துக்குளாகும் சூழலில் அதனை தவிர்ப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளனர்.
அது மட்டுமில்லாமல், சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்திலும், மாலை வாங்க வசதி அற்றவர்கள் கூட துயர நிகழ்வுக்கு வர இயலாத நிலைமையை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்திலும், வசதிக்கு ஏற்றவாறு சிறியது முதல் பெரிய மாலைகள் போடும் போது ஏற்படும் தாழ்வு மனப்பான்மையை தவிர்க்கவும் உள்ளிட்ட காரணங்களால் இந்த முடிவுகளை அந்த கிராம மக்கள் எடுத்துள்ளனர்.
இறந்த நபர்களுக்கு மாலை அணியும் விஷயத்தில், வேதாரண்யம் அருகே உள்ள கிராமத்தினர் எடுத்த முடிவு, தற்போது இணையத்தில் பேசு பொருளாகவும் மாறி உள்ளது.
Also Read | "அன்புள்ள அப்பா அப்பா..".. மகனை பைக்கில் அழைத்துப் போகும் போது தந்தை செய்த செயல்.! கலங்க வைத்த வீடியோ!!..