காதலனை மறக்க மந்திரவாதியிடம் அழைத்துப்போன பெற்றோர்.. கடைசியில மகள் வச்ச டிவிஸ்ட்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Dec 06, 2022 07:01 PM

கள்ளக்குறிச்சியில் காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் தனது பெற்றோரிடமிருந்து பாதுகாப்பு கேட்டு, கணவனுடன் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்திருக்கிறார்.

Kallakurichi girl married lover went police station for protection

Also Read | மார்க்கெட்டில் வைத்து கொடூரமாக பெண்ணை கொலை செய்த நபர்கள்.! வட இந்தியாவையே உலுக்கிய பரபரப்பு சம்பவம்..

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள பால்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவருடைய மகன் ஸ்ரீ ராமகிருஷ்ணன். பிஎஸ்சி பட்டதாரியான இவரும் குதிரைச்சந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்னும் இளம் பெண்ணும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களது காதல் விவகாரம் ஜெயஸ்ரீயின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரிய வந்திருக்கிறது.

ஸ்ரீராமகிருஷ்ணன் - ஜெயஸ்ரீ காதலுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், ஜெயஸ்ரீ தனது காதலனை மறக்க கல்வராயன் மலைக்கு அவரை அழைத்துச் சென்று மாந்திரீகம் செய்து மருந்து கொடுக்க முயற்சித்ததாக சொல்லப்படுகிறது. இருப்பினும் தான் ஸ்ரீ ராமகிருஷ்ணனையே திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சொல்லி இருக்கிறார் ஜெயஸ்ரீ.

Kallakurichi girl married lover and went to the police station for pro

பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வது என இருவரும் முடிவு எடுத்து , அதன்படி தேங்காய் நத்தம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் இன்று காலை மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணன் மற்றும் ஜெயஸ்ரீ கேட்டு தஞ்சம் அடைந்தனர். இளம் தம்பதியிடம் மனுவைப் பெற்ற எஸ் பி பகலவன் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காதலர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாகவும் உறுதியளித்ததன்பேரில் அங்கிருந்து தம்பதியினர் சென்று இருக்கின்றனர்.

Also Read | இட்லி தெரியும் அதென்னப்பா ஃபிட்லி?.. ஒன்னு 90 ரூபாயாம்.. உணவு பிரியர்களிடையே வைரலாகும் வீடியோ..!

Tags : #KALLAKURICHI #GIRL #MARRIED #LOVER #POLICE STATION #PROTECTION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kallakurichi girl married lover went police station for protection | Tamil Nadu News.