காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை.. ஊருக்கு திரும்பியதும் தந்தை சமாதியில் கண்ணீருடன் அஞ்சலி!!.. சோகம்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள கல்லுக்காரன்பட்டி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமுத்து. இவரது மகள் தான் லோகப்பிரியா.
Also Read | "அன்புள்ள அப்பா அப்பா..".. மகனை பைக்கில் அழைத்துப் போகும் போது தந்தை செய்த செயல்.! கலங்க வைத்த வீடியோ!!..
சமீபத்தில் நியூசிலாந்தின் ஆக்லாந்து பகுதியில் நடந்து முடிந்த காமன்வெல்த் பவர் லிப்டிங் விளையாட்டு போட்டியில் லோகப்பிரியா கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்றிருந்தார். 52 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்ட லோக பிரியா, 350 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்திருந்தார்.
ஆனால் அவர் பதக்கம் வென்ற மகிழ்ச்சி ஐந்து நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை. இதற்கு காரணம் ஊரிலிருந்து தனது தந்தை செல்வமுத்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக லோக பிரியாவுக்கு வந்து சேர்ந்த தகவல் தான். முன்னதாக செல்வமுத்து மாரடைப்பால் இறந்து விட்ட நிலையில், மகள் லோகபிரியா போட்டியில் கவனம் சிதறக் கூடும் என்பதால், அவரிடம் சொல்லாமல் இருந்த நிலையில், பதக்கம் வென்ற பின் அவரிடம் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றது.
தங்கம் வென்று மகிழ்ச்சியுடன் வந்த லோகபிரியா, தந்தை இறந்த செய்தியை அறிந்து கதறித் துடித்துள்ளார். பதக்கம் வென்று விட்டு தந்தையிடம் மகிழ்ச்சியாக காட்ட வேண்டும் என ஆசையுடன் இருந்த லோகபிரியாவுக்கு இப்படி ஒரு நிலை வந்துள்ளது பலரையும் கண் கலங்க வைத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, தற்போது காமன்வெல்த் போட்டிகள் முடிந்து சொந்த ஊர் திரும்பிய லோக பிரியா, தந்தை செல்வமுத்து நினைவிடத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தி இருந்தார். மேலும் தனது பதக்கத்தையும் தந்தை சமாதியில் அணிந்து அஞ்சலி செலுத்தி இருந்தார். அங்கே அவர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி இருந்தது காண்போரை கலங்க வைத்திருந்தது. முன்னதாக, காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற லோக பிரியா சொந்த ஊர் திரும்பியதும் பொது மக்கள் வரவேற்பு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read | "யார் இறந்து போனாலும் ஒரே ஒரு மாலை தான்".. ஊரே சேர்ந்து எடுத்த அதிரடி முடிவு!!.. தமிழ்நாடு முழுக்க வைரல்!!