‘9 மணிநேரம் தூங்குனா 1 லட்சம் சம்பளம்’! ‘வேலை இந்தியாவில்தான்’.. பிரபல கம்பெனி அதிரடி அறிவிப்பு..! என்ன ரெடியா..?

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Selvakumar | Nov 29, 2019 01:35 PM

தினமும் 9 மணிநேரம் தூங்கினால் 1 லட்சம் சம்பளம் என நிறுவனம் ஒன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Bengaluru based startup is offering Rs 1 lakh to sleep for 9 hrs

பெங்களூருவை சேர்ந்த வேக் ஃபிட் (Wakefit) என்ற நிறுவனம் இந்த அசத்தலான வேலையை அறிவித்துள்ளது. 100 நாட்கள், பஞ்சு மெத்தை, குளுகுளு ஏசியில் 9 மணிநேரம் தூங்குவது தான் உங்களுடைய வேலை. இதற்கு தூங்குவதில் ஆசை, ஆர்வம், காதல் என இந்த தகுதிகள் எல்லாம் இருந்தால் போதும் என தெரிவித்துள்ளனர்.

தேர்வாகும் நபர்கள் அந்த நிறுவனத்தின் மெத்தையில் 100 நாட்கள் தினமும் 9 மணிநேரம் தூங்க வேண்டும். அவர்களுக்கு நவீன உடற்பயிற்சி கருவிகள், ஸ்லீப் டிராக்கர், நிபுணர்களின் கவுன்சலிங் ஆகியவை வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். தூங்குவதில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வம், காதல் குறித்து வீடியோ எடுத்து அனுப்ப வேண்டும். இதுபோல் 100 நாட்கள் சிறப்பாக செய்து முடித்தால் அவர்களுக்கு 1 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்த அந்நிறுவனத்தின் இணை இயக்குநர், ‘தூக்கத்திற்கு தீர்வு காணும் நிறுவனமான நாங்கள், மக்களை நிம்மதியான தூக்கத்திற்கு ஊக்கவிப்பதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம். தினமும் வேகமாக சுழன்றுகொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், தூக்கத்தையும் தினசரி கடமைகளையும் மறந்துவிடுகின்றனர். இதன் முக்கியத்துவத்தை யாரும் உணர்வதில்லை. இது நம் உடல்நலத்தையும், வாழ்க்கை தரத்தையும் பாதிக்கும்’ என தெரிவித்துள்ளார்.

Tags : #BENGALURU #JOBS #MONEY #STARTUP #WAKEFIT #SLEEP #INTERNSHIP