'பெண்ணை வெறித்தனமாக பெல்ட்டால் அடித்த போலீஸ்..' வீடியோ வைரலாகி அதிகாரிகள்மீது நடவடிக்கை..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | May 28, 2019 11:52 PM
பெண் ஒருவரை காவலர் பெல்ட்டால் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் விசாரணையின்போது பெண் ஒருவரை தலைமைக் காவலர் பெல்ட்டால் கடுமையாகத் தாக்குகிறார். அவரைச் சுற்றியும் சில காவலர்கள் மிரட்டியபடி நிற்கின்றனர். கடந்த அக்டோபர் மாதம் நடந்த இந்த சம்பவம் பெண் தாக்கப்படும் வீடியோ வெளியானதால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பெண் தாக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. வீடியோ ஆதாரம் வெளியானதை அடுத்து சம்பந்தப்பட்ட காவலர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென காவல்துறைக்கு மகளிர் ஆணையம் அழுத்தம் கொடுத்தது.
அதைத் தொடர்ந்து தலைமைக் காவலர்கள் பால்தேவ், ரோஹித் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்தும், சிறப்புக் காவலர்கள் கிரிஷான், ஹர்பல், தினேஷ் ஆகியோரை பணிநீக்கம் செய்தும் ஃபரிதாபாத் காவல் ஆணையர் சஞ்சய் உத்தரவிட்டுள்ளார்.
#BigNews : खट्टर राज में पुलिस थानों में भी सुरक्षित नहीं महिलाएं !
बल्लभगढ़ में पुलिस की शर्मनाक करतूत
पुलिस थाने में पुरुष पुलिस कर्मी ने महिला को बेल्ट से पीटा। pic.twitter.com/gBw8VIrOSn
— ONE HARYANA (@OneHaryanaOffcl) May 27, 2019
