'பெண்ணின் கருப்பைக்குள்'...'பைக்கின் கைப்பிடி துண்டு'...'கொடூர கணவனின்'... அதிர வைக்கும் செயல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | May 15, 2019 09:11 AM

பெண்ணின் கருப்பையில் இருந்து பைக் கைப்பிடியின் 6 இஞ்ச் அளவிலான பிளாஸ்டிக் துண்டு அகற்றப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Doctors remove bike handle piece from woman’s uterus

மத்தியப்பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தொடர் வயிற்றுவலியால்  அவதிப்பட்டு வந்துள்ளார்.இதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.அப்போது அவரை சோதனை செய்த மருத்துவர்கள் அதிர்ந்து போனார்கள்.அவரது வயிற்று பகுதியை ஸ்கேன் செய்து பார்த்த போது, அந்த பெண்ணின் கருப்பையில்,6 இஞ்ச் அளவிலான உடைந்த பிளாஸ்டிக் துண்டு இருந்ததை கண்டுபிடித்தார்கள்.இதனையடுத்து அதனது அறுவை சிகிச்சை மூலம் அகற்ற.1 லட்சம் ரூபாய் செலவாகும் என தனியார் மருத்துவமனை நிர்வாகம் கூறியது.

இதனிடையே அந்த பெண்ணிடம் போதுமான பணம் இல்லாததால் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தார்.அவரின் புகாரை கண்டு காவல்துறையினரே அதிர்ந்து போனார்கள்.இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் ''பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும் அதே பகுதியை சேர்ந்த நபருக்கும் கடந்த 15 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.தற்போது அவருக்கு 6 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கடந்த இரண்டு வருடங்களாக அவரது கணவர்,அந்த பெண்ணை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அப்போது கோபமடைந்த அவரின் கணவர் 'அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் பைக்கின் உடைந்த கைப்பிடியை சொருகி' காட்டுமிராண்டி தனமாக கொடுமைப்படுத்தியுள்ளார்.ஆனால் நடந்த சம்பவம் குறித்து]அந்த பெண் யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்' என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்த காவல்துறையினர், அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.அதில் பைக் கைப்பிடியின் 6 இஞ்ச் அளவிலான  உடைந்த பகுதியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.இதனிடையே அந்த பெண்ணின் கணவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags : #POLICE #WOMAN’S UTERUS #BIKE HANDLE PIECE