'சூப்பர் மார்க்கெட் 'ட்ராலி'யில் சுருண்டு படுத்திருந்த பாம்பு'... அலறிய ஊழியர்... 'திடுக்' சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | May 29, 2019 05:54 PM

சூப்பர் மார்க்கெட் தள்ளுவண்டியில் பாம்பு ஒன்று சிக்கியிருக்கும் புகைப்படம், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.

A giant snake was found in a shopping cart at a Texas supermarket

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில், பொருட்கள் எடுத்து வரும் தள்ளுவண்டி ஒன்றை, ஊழியர் ஒருவர் எடுக்க முயன்றார். அப்போது, பாம்பு ஒன்று சிக்கித்தவிப்பதை கண்டு அலறிய அவர், அங்கிருந்து வெளியே ஓடினார். இதையடுத்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 

அதன்பின்னர், சூப்பர்மார்க்கெட்டில் இருந்தவர்களுடன், காவலர்களும் சேர்ந்து பாம்பை மீட்க முயன்றனர். ஆனால் முடியாததால், அதன் பின் இரண்டு வண்டிகளுக்கு இடையே சிக்கிய அந்த பாம்பை ஜான் ஹெக்கமான் என்பவரின் உதவியால் மீட்டனர். அப்போது அவரை பாம்பு கடித்த நிலையில் விஷத்தன்மை இல்லாத பாம்பு என்பதால் உயிர் தப்பினார். இதனை வடகிழக்கு காவல்பிரிவு பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது.

பிரபல நிறுவனத்தில் இவ்வாறு நிகழ்ந்த சம்பவத்துக்கு, சமூக வலைதளங்களில் மக்கள், தங்களது அச்சத்தையும் அதிர்ச்சியையும் பதிவு செய்தனர். ஆனால், கனமழையால் இதுபோன்ற பாம்புகள், தங்கள் வாழ்விடத்தைவிட்டு, இவ்வாறு வந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Tags : #AMERICA #TEXSAS #RATSNAKE #TROLLY