'மண்ட பத்திரம்'...' ஹெல்மேட்' போடுங்க பாஸ்...'LIFE' நல்லா இருக்கும்... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | May 18, 2019 12:13 PM

ஹெல்மேட் போடுவதன் அவசியத்தை வலியுறுத்தி கேரள காவல்துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது.

Kerala Police released a awareness video about wearing helmet

இருசக்கர வாகனத்தில் செல்லும் போது ஹெல்மேட் போடுவது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். பெரிய விபத்தில் இருந்து மட்டுமல்ல,சிறிதாக நடக்கும் விபத்தில் இருந்து கூட நம்மை தற்காத்து கொள்வது இந்த ஹெல்மேட் தான். காவல்துறை சார்பில் எவ்வளவோ விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், ஹெல்மேட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவது என்பது குறைந்தபாடில்லை.இதனால் சாலை விபத்துகளில் மக்கள் தங்கள் உயிரை இழக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இதனை மக்களிடத்தில் எடுத்து செல்ல கேரள காவல்துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ ஒன்று பலரையும் கவர்ந்துள்ளது.ஹெல்மேட் போட்டுகொண்டு வேகமாக வரும் ஒரு நபர் நேராக சுவரில் வந்து மோதுகிறார். மோதிய வேகத்தில் தூக்கி வீசப்படும் அவர் ஹெல்மேட் அணிந்திருந்ததால் அவரின் உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.சிறு காயம் கூட ஏற்படாமல் தப்பித்து விடுகிறார்.இந்த விழிப்புணர்வு வீடியோவை கேரள காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #KERALA #POLICE #HELMET #TWITTER #KERALA POLICE