"ஆள்" நடமாட்டமுள்ள பகுதி... 'பட்டப்பகலில்' அடுத்தடுத்து கேட்ட 'துப்பாக்கி' சத்தம்... சுற்றி நின்று 'படம்பிடித்த' மக்கள்...மனதை உறைய வைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Apr 16, 2020 08:21 PM

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ பகுதியில் அதிகம் குடியிருப்புள்ள பகுதியொன்றில் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரை பட்டப்பகலில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

Man from UP shoots an old lady and people shoots in phone

அக்கம் பக்கம் இருந்தவர்கள் அந்த நபரை தடுத்து அந்த மூதாட்டியை காப்பாற்ற முயற்சி செய்யாமல் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவில் துப்பாக்கி வைத்திருந்த நபரிடம் இருந்து மூதாட்டி தப்பித்து வீட்டிற்குள் செல்ல முயற்சிக்கையில் அந்த நபர் துப்பாக்கி எடுத்து அவரை சுட்டுள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மூதாட்டியை மீண்டும் ஒருமுறை துப்பாக்கியை கொண்டு அந்த நபர் சுட்டுள்ளார்.

அந்த மூதாட்டி யாரேனும் உதவி செய்யக் கத்தி அழைத்தும் எந்த பயனுமில்லை. சிறிது நேரத்தில் துப்பாக்கி சூடு நடந்த விவரமறிந்து அங்கு வந்த போலீசார், துப்பாக்கியால் சுட்ட நபரை கைது செய்தனர். அந்த வயதானவரை சுட்டதற்கான காரணங்கள் குறித்து போலீசார் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில், பட்டப்பகலில் வயதான ஒருவரை துப்பாக்கி எடுத்து சுட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.