'நான் பெத்த மவனே லாக்டவுன்...' 'லாக்டவுன்...' 'உள்ளேன் ஐயா...!' "பேரு வக்கிறதுல நாங்க தான் கிங்..." 'தொடரும் உ..பி'ஸ். அட்ராசிட்டிஸ்...'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Apr 01, 2020 10:38 PM

உத்திரபிரதேசத்தில் புதிதாக பிறந்த ஆண் குழந்தைக்கு பெற்றோர் 'லாக்டவுன்' என்று பெயர் சூட்டியுள்ளனர்.

In Uttar Pradesh parents have named the boy baby Lockdown

உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூரில் சமீபத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு 'கொரோனா' என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த பெயரை குழந்தையின் மாமா நித்திஷ் திருப்தி வைத்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தியோரியா மாவட்டத்தில் புதிதாக பிறந்த ஆண் குழந்தைக்கு 'லாக்டவுன்' என்று பெற்றோர் பெயர் வைத்துள்ளனர்.

இதுகுறித்து குழந்தையின் தந்தை பவன் தெரிவிக்கையில், “என்னுடைய குழந்தை ஊரடங்கு சமயத்தில் பிறந்தான். கொரோனா தொற்று மக்களிடம் பரவாமல் தடுக்க சரியான நேரத்தில் பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். ஊரடங்கு தேசிய நலன் மீதான அக்கறை. அதனால் எங்களின் குழந்தைக்கு 'லாக்டவுன்' என பெயர் வைக்க முடிவு செய்தோம்“ என்று கூறினார்.

Tags : #CORONA #UTTARPRADESH #BOYBABY #LOCKDOWN #NAMED