"ஒரு வாரத்துல கல்யாணம்'... 'எல்லாமே பாத்து பாத்து செஞ்சோம்'... 'அதுக்குள்ள இப்படி பண்ணிட்டானே...!” - அண்ணனால், 'அட்வகேட்' செய்த திடுக்கிடும் காரியம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்செங்கல்பட்டு அருகே இளைஞர் ஒருவர் திருமணத்திற்கு ஒரு வாரம் முன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சிலாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்நாதன் (30). இவர் வழக்கறிஞராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய அண்ணன் திருநாவுக்கரசு ஓராண்டுக்கு முன்பு தீபாவளி சீட்டு பிடித்து, அந்த சீட்டு பணத்துடன் தலைமறைவானதாக புகார் எழுந்துள்ளது. அப்போது முதல் வாடிக்கையாளர்கள் செந்தில்நாதனிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளனர்.
இதையடுத்து அடுத்த வாரம் செந்தில்நாதனுக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் சீட்டுப்பணம் கேட்டு பலரும் நெருக்கடி கொடுத்ததால், மனமுடைந்த செந்தில்நாதன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

மற்ற செய்திகள்
