'சுத்தியலில்' இருந்த 'ரத்தக்'கறை,,... 'மகன்' கண்ட அதிர்ச்சி காட்சி,,.. 'லிவிங்' டுகெதர் உறவில் நிகழ்ந்த 'கொடூரம்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகிழக்கு டெல்லியின் வினோத் நகர் பகுதியை சேர்ந்தவர் மம்தா சர்மா. 35 வயதான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பாதுகாவலராக பணிபுரிந்து வந்த நிலையில், பிரம்பால் சிங் (39) என்பவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வருகின்றனர்.

பிரம்பால் சிங்கிற்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். மம்தா சர்மாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஏற்கனவே 17 வயதில் ஒரு மகனும் உள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன் வினோத் நகர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருகின்றனர். உடன், மம்தா சர்மாவின் மகனும் வசித்து வந்துள்ளான்.
இந்நிலையில், மம்தாவின் 17 வயது மகன் சில தினங்களுக்கு முன் வீட்டிற்கு திரும்பி வந்த போது கண்ட காட்சி, இளைஞரை அதிர்ச்சியில் உறையச் செய்தது. மம்தா சர்மா சுத்தியலால் தாக்கப்பட்டு உயிரிழந்து கிடந்தார். இது தொடர்பாக, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், பிரம்பால் சிங்கிடம் விசாரணை மேற்கொண்ட போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
முன்னதாக, பிரம்பால் சிங் குடும்பத்தினர் தகராறு செய்து வந்ததால் மம்தா சர்மா, பிரம்பால் சிங் உடனான உறவை முறித்துக் கொள்ள முடிவு செய்துள்ளார். ஆனால், பிரம்பால் சிங் அதற்கு விருப்பப்படவில்லை. அதே போல, மம்தா யாருடனோ தனியாக தொலைபேசியில் பேசுவதாகவும் மம்தா சர்மாவிற்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் மம்தாவிடம் பிரம்பால் சிங் தொலைபேசியின் பாஸ்வேர்டை கேட்டுள்ளார். ஆனால், மம்தா கொடுக்க மறுக்கவே இருவருக்கும் இடையில் தகராறு எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பிரம்பால் சிங், சுத்தியலை எடுத்து தாக்கியுள்ளார்.
இதில், மம்தா சர்மா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். முதற்கட்ட விசாரணையில், பிரம்பால் சிங் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், தொடர்ந்து அவரை கைது செய்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
