"மாடிப்படியில இருந்து விழுந்துட்டா சார்... அதுனால 'வீட்டுக்குள்ளயே..." - அம்மா, அப்பா மேல... போலீசாருக்கு எழுந்த 'டவுட்'... - சிறுமிக்கு நடந்த 'பதைபதை'க்கும் 'கொடூரம்'!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Aug 25, 2020 10:46 AM

உத்தரப்பிரதேச மாநிலம், பரேலி என்னும் பகுதியை அடுத்த இஷாத் நகர் என்னும் 7 வயது சிறுமியை காணாமல் போனதாக சிறுமியின் வீட்டிற்கு அருகே உள்ளவர்கள் புகாரளித்தனர்.

UP Bareilly parents stab 7yr old daughter 15 times polie arrest

தொடர்ந்து, அங்கு வந்து போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். முன்னதாக, அந்த சிறுமியின் தாயார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்து போன நிலையில், அவரது தந்தை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். வீட்டு வேலைகளை சிறுமி செய்யவில்லை எனக்கூறி, அவரது சித்தி அடிக்கடி சிறுமியை துன்புறுத்தி வந்துள்ளார். சிறுமியின் முகத்தில் உதைத்தும், அவ்வபோது தடியைக் கொண்டு தாக்கியும் வந்துள்ளார். இதனால் சிறுமி காணாமல் போனவுடன் அக்கம் பக்கத்தினர் சந்தேகத்தின் பெயரில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன் காரணமாக, சிறுமியின் பெற்றோர்கள் மீது எழுந்த சந்தேகத்தின் பெயரில் அவர்களிடம் விசாரணையை மேற்கொண்டனர். முதலில் சிறுமி, உறவினர்கள் வீட்டுக்கு சென்ற போது காணாமல் போனதாக கூறிய தந்தை, பின்னர் சிறுமி மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாகவும், அதனால் அவரது உடலை வீட்டிலேயே அடக்கம் செய்து விட்டோம் என்றும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.

சிறுமியின் உடலை தோண்டி எடுத்த போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பரிசோதனை முடிவில் வெளியான தகவல்கள், போலீசாருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுமியின் உடலில் பல பாகங்கள் அதிகம் காயமடைந்து சிதைந்திருந்தது. மேலும், சிறுமியின் உடல் உறுப்புகளும் அதிகம் சேதமடைந்திருந்தது.

தொடர்ந்து, சிறுமின் பெற்றோர்களிடம் விசாரணையை மேற்கொண்ட போது, அவர்கள் சிறுமியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். சிறுமியை தடியைக் கொண்டு கொடூரமாக தாக்கிய சித்தி, 15 முறை கத்தியைக் கொண்டு குத்தியும் கொலை செய்து பின்னர் சிறுமியின் உடலை புதைத்துள்ளனர். சிறுமியின் உடலில் அதிக ரத்தம் வெளியேறியதால் தான் சிறுமி உயிரிழந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சிறுமியின் தந்தை மற்றும் சித்தி ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதி செய்யப்பட்டனர். சிறுமியின் அத்தை ஒருவரும் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், தலைமறைவாகவுள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. UP Bareilly parents stab 7yr old daughter 15 times polie arrest | India News.