‘அறையில் இருந்து வந்த அலறல் சத்தம்!’.. பதறி அடித்து ஓடிய கணவர் கண்ட காட்சி! .. குழந்தைகளுடன் இருந்த இளம் தாய் எடுத்த விபரீத முடிவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இரண்டு குழந்தைகளை தவிக்கவிட்டுவிட்டு இளம் தாய் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார், இவரது மனைவி ஹேமாவதி. 24 வயதான ஹேமாவதி, மற்றும் சந்தோஷ்குமார் தம்பதிக்கு இரண்டறை வயது ஆண் குழந்தை மற்றும் 5 மாத கைக்குழந்தை என இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் ஹேமாவதி, நேற்றைய தினம் தனது படுக்கையறையில் இருந்துள்ளார்.
சந்தோஷ்குமாரோ வெளியில் படுத்திருந்துள்ளார். அப்போது ஹேமாவதி திடீரென்று அலறியுள்ளார். அதை கேட்டு ஓடிப்போய் பார்த்த சந்தோஷ்குமார், ஹேமாவதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தாமதிக்காமல், ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு ஹேமாவதியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகக் கூறினர். இதுகுறித்து போலீஸார் விசாரித்தபோது, லாரியில் தண்ணீர் விநியோகம் செய்யும் சந்தோஷ்குமார் தன்னிடம் வேலை பார்த்த ஓட்டுநருக்கு சம்பளம் கொடுக்காததால், அவரது தாயார் ஹேமாவதியை திட்டியதாகவும், அதனால் மனமுடைந்த ஹேமாவதி இத்தகைய முடிவினை எடுத்திருக்கலாம் எனவும் தெரிகிறது. தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
