"கூடவே இருந்தாரு... ஆனா, அதுக்கு அப்பறம்தான் தெரிஞ்சுது"... 'தந்தை செய்த காரியத்தால்'... 'நிலைகுலைந்து நிற்கும் குடும்பம்!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்மயிலாடுதுறையில் மனைவி இறந்த சோகத்தில் கணவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தை சேர்ந்த தம்பதி குமார் - பத்மா. இவர்களுக்கு 5 மகன்கள், 1 மகள் உள்ளனர். அவர்களில் மூத்த மகனுக்கு மட்டுமே திருமணமாகியுள்ள நிலையில், அனைவரும் கூட்டு குடும்பமாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பத்மா சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த வாரம் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து பாசத்துடன் பார்த்துக்கொள்ள 6 பிள்ளைகள் இருந்தும் மனைவி இறந்த சோகத்தில் இருந்த குமார் நேற்று வீட்டிலேயே விஷமருந்தி விட்டு அனைவருடனும் இருந்துள்ளார். பின்னர் திடீரென அவர் வாந்தி எடுத்தபோது தான் அவர் விஷமருந்தியது அனைவருக்கும் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

மற்ற செய்திகள்
