'மதுவை ஊற்றி'... '50 வயது பெண்ணை'... '7 பேர் சேர்ந்து செய்த கொடூரம்'... 'வைரலான வீடியோவால் சிக்கிய கும்பல்'... 'பதறவைக்கும் சம்பவம்!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாபீகாரில் 50 வயது பெண் ஒருவர் 7 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது.

பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்திலுள்ள கவுர்ச்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஃபயாம்பூர் பகுதியில் கணவனை இழந்த 50 வயது பெண் ஒருவர் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அங்கே சென்ற 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று கட்டாயப்படுத்தி அவருடைய வாயில் மதுவை ஊற்றியுள்ளது. பின்னர் அவர் மயங்கியதும் பாலியல் வன்கொடுமை செய்து, அதை செல்போனிலும் வீடியோ எடுத்துள்ளனர். அந்த கும்பலை சேர்ந்த 6 பேர் அந்த வீடியோக்களை அழித்துவிட்ட நிலையில், விகாஷ்குமார் என்பவர் மட்டும் அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த தினாகுமார், விகாஷ்குமார், ரூஷன்குமார், சன்னிகுமார், பிந்துகுமார் மற்றும் முகேஷ்குமார் ஆகிய 6 பேரை கைது செய்துள்ளனர். விகாஷ்குமாரிடம் இருந்து பாலியல் வன்கொடுமை தொடர்பான வீடியோவையும் கைப்பற்றிய போலீசார் அதை அழித்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒரு குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
