'திருவண்ணாமலை' வந்த 'அமெரிக்க' பொண்ணு... ’ஒரு மாசமா ஃபாலோ பண்ண சாமியாருக்கு...’ ‘காத்திருந்த அதிர்ச்சி 'வைத்தியம்'!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவண்ணாமலை கோவில் மற்றும் மலையை சுற்றியுள்ள பகுதிகளில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் தங்கியுள்ளனர்.

அப்பகுதியிலுள்ள அத்தியந்தல் பகுதியை அடுத்த அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், அமெரிக்காவை சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் கடந்த 8 மாதங்களாக தங்கியுள்ளார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 34 வயதான மணிகண்டன் என்பவர் தனது குடும்பத்தை துறந்து, திருவண்ணாமலை பகுதியில் காவி உடுத்து திரிந்து வருகிறார்.
கடந்த ஒரு மாதமாக அந்த அமெரிக்க பெண் கிரிவலம் செய்வதை பின்தொடர்ந்த மணிகண்டன், அவரைத் தொடர்ந்து கண்காணித்துள்ளார். மேலும், அவர் தனியாக வசிப்பதையும் மணிகண்டன் அறிந்து கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, நேற்று அதிகாலை அந்த பெண் வீட்டிற்கு சென்ற மணிகண்டன், அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்த இரும்புக் கம்பி ஒன்றால், அந்த பெண் மணிகண்டனை தாக்கியுள்ளார்.
மேலும், அந்த பெண் கூச்சலிட்டதில் அருகிலுள்ளவர்கள் ஓடி வந்து மணிகண்டனை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த அமெரிக்க பெண்ணுக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்
