‘பள்ளிக்குள் கண்டித்த ஆசிரியர்..’ வெளியே வந்ததும்.. ‘மாணவர்கள் செய்த அதிர்ச்சிக் காரியம்..’

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Aug 02, 2019 02:56 PM

கும்பகோணத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தைக் கண்டித்த ஆசிரியர் மீது பள்ளி மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Teacher attacked by students after school in Kumbakonam

கும்பகோணம் ஸ்ரீநகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வரும் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதைப் பார்த்த உயிரியல் துறை ஆசிரியர் கல்யாணசுந்தரம் மாணவர்களைக் கண்டித்துள்ளார். மேலும் இதைப் பற்றி பள்ளி முதல்வரிடமும் அவர் புகார் அளித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள் நேற்று பள்ளி முடிந்து வெளியே வந்த கல்யாணசுந்தரத்தை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் முகம் மற்றும் தலைப் பகுதியில் காயமடைந்த அவர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #KUMBAKONAM #PRIVATE #SCHOOL #TEACHER #STUDENTS #ATTACK