‘சிறுமியைக் காரில் கடத்திச் சென்ற பெண்..’ அடைத்து வைத்து செய்த அதிரவைக்கும் காரியம்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Aug 07, 2019 06:53 PM

காரைக்கால் அருகே சிறுமியைக் கடத்திச் சென்று தன்பாலின உறவு கொண்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

13 year old girl kidnapped raped by woman in Karaikal

காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரியை சேர்ந்த ஜோதி என்பவரது மனைவி கலை அமுது (22). இவர் பிள்ளைத் தெருவாசல் கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியைக் கடத்திச் சென்றுள்ளதாக சிறுமியின் தாய் கடந்த 2ஆம் தேதி போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் கலை அமுதுவின் செல்ஃபோன் டவரை ஆய்வு செய்ததில் அவர் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அங்கு விரைந்த போலீஸார் கலை அமுதுவிடமிருந்து கடத்தப்பட்ட சிறுமியை மீட்டுள்ளனர்.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில்  சிறுமியைக் கடத்திச் சென்ற கலை அமுது அவரிடம் தன்பாலின உறவு கொண்டது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து கலை அமுது மற்றும் சிறுமியைக் காரில் கடத்திச் செல்ல உதவியாக இருந்த சுரேஷ் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர்.

Tags : #KARAIKAL #WOMAN #KIDNAP #RAPE #TEENGIRL #HOMOSEXUALITY