VIDEO: SLUMDOG MILLIONAIRE திரைப்படம் பாணியில்... கடந்த கால சம்பவத்தால்... செல்வந்தராக மாறிய மாணவி!.. அந்த கேள்வி தான் ஹைலைட்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆஸ்கர் விருதுகளை அள்ளிக்குவித்த Slumdog millionaire திரைப்படத்தில் வருவது போல, கடந்த கால வாழ்க்கையில் நடந்த சம்பவத்தால் ஒரு பெண்மணி தற்போது செல்வந்தர் ஆகியுள்ளார்.
'Kaun banega crorepati', 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' முதலிய நிகழ்ச்சிகளைப் போல 'Who wants to be a Millionaire?' என்ற நிகழ்ச்சி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
அதில், Mainga Bhima என்ற பெண், சமீபத்தில் நடந்து முடிந்த கடைசி episodeல் பங்கேற்றார்.
Bristol பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வரும் அவர், இந்த போட்டியில் கலந்து கொண்டு, வெல்லும் பணத்தை தன்னுடைய கல்லூரிக் கட்டணம் செலுத்த திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், 64,000 பவுண்ட் (இங்கிலாந்து நாணயம்) என்ற பெருந்தொகைக்கான கேள்வி அவர் முன் வைக்கப்பட்டது. அந்த கேள்வி தான் மிகவும் சுவாரஸ்யமானது. Mainga Bhima மருத்துவம் படிப்பதற்கு முன்பு ஒரு பதிப்பகத்தில் வேலை செய்துள்ளார்.
அந்த வகையில், 64,000 பவுண்ட்டுக்கான கேள்வியானது, 'In 2013, Penguin merged with which other company to form the world's largest book publisher?' என்பதாகும்.
இதற்கு நான்கு ஆப்ஷன்கள் வழங்கப்பட்டன. அப்போது, இந்த கேள்விக்கு சரியான விடையை தேர்வு செய்வதற்கு முன், தான் அந்த கம்பெனியில் வேலை செய்துள்ளதாகவும், அதனால் தனக்கு இப்போது எவ்வளவு பெரிய நன்மை கிடைக்கப்போகிறது என்றும் சிலாகித்து கூறினார்.
பின்னர், அவர் தேர்ந்தெடுத்த 'Random house' என்ற விடை சரியானது என உறுதி செய்யப்பட்டவுடன் அவருக்கு 64,000 பவுண்ட் (சுமார் ரூ.63 லட்சம்) அளிக்கப்பட்டது. தொடர்ந்து போட்டியில் பங்கேற்றா அவர், 125,000 பவுண்டுக்கான கேள்விக்கு சரியான விடை அளிக்காததால், 64,000 பவுண்ட் உடன் வெளியேறினார்.