'நம்புனதுக்கு வெச்சு செஞ்சிடுச்சு!'.. இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி!.. இன்ஸ்டாகிராமில் பரவும் போஸ்ட்! மன்னிப்பு கேட்ட நிறுவனம்!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் பெண் ஒருவர் பயன்படுத்திய தலைமுடி ஸ்ப்ரேயால் அவதிப்பட்டுள்ள சம்பவம் வைரலாகி உள்ளது. அமெரிக்காவில் டெசிகா பிரவுன் என்பவர் ஒரு வழக்கத்துக்கு மாறான க்ளூ ஸ்ப்ரேவை பயன்படுத்தியதால் அவருடைய முடி தலையிலேயே ஒட்டிக் கொண்டது.

அமெரிக்காவின் லுசியானா பகுதியை சேர்ந்த டெசிகா பிரவுன், பிப்ரவரி 3 ஆம் தேதி இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்-டாக் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ மூலம் தான் அந்த அதிரவைக்கும் சம்பவம் தெரியவந்தது. தலைமுடியை பராமரிக்க அவர் வழக்கமாக உபயோகிக்கும் ஹேர் ஸ்ப்ரேவுக்கு பதிலாக வேறு ஒரு ஸ்ப்ரேயை பயன்படுத்திவிட்டார்.
இதனால் அவரது தலைமுடி தலையிலேயே இறுக்கமாக ஓட்டிக்கொண்டுவிட்டது. அவர் பயன்படுத்தியது கொரில்லா க்ளூ ஸ்ப்ரே என்கிற ஒன்று. இதனை அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டு தெரிவித்ததுடன், தமது தலைமுடிக்கு ஏற்பட்ட சேதம் குறித்தும் ஆதாரப்பூர்வமாகக் காட்டினார்.
இதை கவனித்த கொரில்லா க்ளூ நிறுவனம் அவரின் நிலை அறிந்து மன்னிப்பு கேட்டது. இதை அடுத்து பலரும் இவருக்கு ஆறுதல் கூறி வர, மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த புகைப்படத்தை தமது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
