எந்த பக்கமும் போக முடியாது... அர்த்த ராத்திரியில 'இப்படி' மாட்டிகிட்டோமே!.. அடர்ந்த காட்டுக்குள்... 'வீல்'னு ஒரு அலறல் சத்தம்!.. 'சாதிச்சிட்டீங்க'!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Feb 05, 2021 08:52 PM

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கோட்டமாளம் மலைப்பகுதியைச் சேர்ந்த கிருஷணன் என்பவரின் மனைவி கிருஷ்ணம்மாள் (25). இவர்கள் வசிக்கும் குன்றி கிராமம் அடர்ந்த காட்டுப்பகுதியில் இருக்கிறது.

sathyamangalam baby girl born in ambulance in dense forest midnight

போக்குவரத்து வசதியில்லாத நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கிருஷ்ணம்மாளுக்கு திடீரென இடுப்பு வலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து சத்தியமங்கலம் 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கோகுலகண்ணன் மற்றும் மருத்துவ உதவியாளர் சங்கர் ஆகியோர் நிறைமாத கர்ப்பிணியான கிருஷ்ணம்மாளை 108 ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு கடம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அடர்ந்த காட்டுப்பகுதியான வெள்ளைத்தொட்டி என்ற இடத்தின் அருகே வரும்போது வலி அதிகமானதால் மருத்துவ உதவியாளர் சங்கர், ஓட்டுநர் கோகுலகண்ணன் ஆகியோர் வேறு வழியின்றி காட்டுப்பகுதிக்குள்ளேயே ஆம்புலன்ஸை நிறுத்தி பிரசவம் பார்த்தனர். இதில் அவருக்கு நல்ல நிலையில் பெண் குழந்தை பிறந்தது.

பின்னர், அதே ஆம்புலன்ஸில் தாய் மற்றும் குழந்தையை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது தாயும் குழந்தையும் நன்றாக உள்ளனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sathyamangalam baby girl born in ambulance in dense forest midnight | Tamil Nadu News.