'வீடு கட்ட பள்ளம் தோண்டுறப்போ...' 'ஏதோ தட்டு பட்டுருக்கு...' 'எடுத்து பார்த்தா...' - விஷயம் கேள்வி பட்டு குவிந்த பொதுமக்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுராந்தகம், அடுத்த படாளம் அருகே அரசர் கோவில் கிராமம் பாலாற்றங்கரையோரம் வசிக்கும் குடும்பத்தார் தங்களின் நிலத்தில் புதுவீடு கட்ட திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் வீட்டிற்கான பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் நேற்று காலை, மணலில் கல்லால் ஆன சாமி சிலை இருப்பதை கண்டுள்ளனர்.
இந்த செய்தியானது அப்பகுதி மக்களுக்கு பரவி, ஏராளமான கிராம மக்கள் அங்கு சென்று சிலையை பார்வையிட்டனர். இந்த இடதின் முன்புறம் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான வரதராஜ பெருமாள் கோயில், பாலாற்றங்கரையோரம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த தகவலறிந்து மதுராந்தகம் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ஜீவா, மேலாளர் வீரராகவன் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டுள்ளனர். அப்போது சுமார், 4 அடி உயரம், 3 அடி அகலம் கொண்ட பெருமாள் சிலையை மீட்டு தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு சென்றனர்.